Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழக முதல்வரின் பிரதமர் கனவு பலிக்காது என நடிகையும் திமுக உறுப்பினருமான குஷ்பு திருச்சி மாநாட்டில் பேசியுள்ளார்.

திருச்சியில் நடைபெற்ற திமுகவின் 10 வது மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய அவர்,  'திருச்சி மாநாட்டை திருப்புமுனை மாநாடு என்று கூறுகின்றனர். நான் இந்த மாநாட்டை அதிமுகவின் சர்வாதிகார ஆட்சியை மாற்றம் செய்யும் திருப்புமுனை மாநாடு என்றுதான் சொல்வேன்.

தேர்தல் நேரம் என்பதால் அதிமுக அரசு தற்போது நாடகம் ஆடுகிறது. உண்மையில் ஜெயலலிதாவுக்கு தமிழகப் பிரச்னைகளில் அக்கறை இல்லை.

இதற்கிடையில் பிரதமராக வேண்டும் என்று ஜெயலலிதா கனவு காண்கிறார். அது பகல் கனவு. பலிக்காது. தமிழகப் பிரச்னையையே தீர்க்க முடியாதவர், தேசிய பிரச்னையை தீர்க்கப் போகிறேன் என்று கூறுகிறார். இதை தமிழக மக்கள் நம்புவார்களா?

வரும் மக்களவைத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் அதிமுக தோற்கும். இரத்தத்தில் எழுதித் தருகிறேன். வெற்றி திமுகவுக்கு தான். 40 சீட்டை தலைவருக்கு கொடுத்துப் பாருங்கள்.

திமுக மீது சில குற்றச்சாட்டுகள் சொல்லப்படுகின்றன. அந்தக் குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய் என்பதை நிரூபிக்கும் வகையில் மக்கள் திமுகவுக்கு வாக்களித்து வெற்றிபெறச் செய்வார்கள் என்றும் 2016 சட்டப்பேரவை தேர்தலிலும் திமுக வெற்றி பெறும். 6வது முறையாக கருணாநிதி முதல்வராக அமர்வார்' எனக் கூறியுள்ளார்.

காணொளி

0 Responses to ஜெயலலிதாவின் பிரதமராகும் பகல் கனவு பலிகாது : குஷ்பு ஆவேசம் (காணொளி இணைப்பு)

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com