Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

திமுக 10வது மாநில மாநாடு பிப்ரவரி 15, 16 தேதிகளில் திருச்சியில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்.

கச்சத்தீவில் தமிழக மீனவர்களுக்கு மீன்பிடி உரிமை இல்லை என்ற மத்திய அரசின் பதில் மனுவுக்கு கண்டனம்.

இலங்கை மனித உரிமை மீறலுக்கு சர்வதேச விசாரணை ஐ.நா.வில் இந்தியா தனித் தீர்மானம் கொண்டுவர வேண்டும்.

சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீட்டை முற்றிலுமாக தடுத்திட வேண்டும்.

தூக்குத் தண்டனையை அடியோடு ரத்து செய்ய சட்டத் திருத்தம் கொண்டுவர வேண்டும்.

காவிரி மேலாண்மை வாரியம், காவிரி ஒழுங்குமுறை குழுவை உடனடியாக அமைக்க வேண்டும்.

அத்தியாவசியப் பொருட்களின் விலையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வங்கிகள் மாணவர்களுக்கு வழங்கிய கல்விக் கடன்கள் முழுவதையும் தள்ளுபடி செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழக மீனவர்களை பாதுகாக்க இலங்கை அரசுடன் மத்திய அரசே பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.

நெசவாளர்களின் பன்மடங்கு மின்கட்டணம், வரி வசூலிக்கும் அதிமுக அரசுக்கு மாநாட்டில் கண்டனம் தெரிவிக்கப்படுகிறது.

நெல் கொள்முதல் விலையை குறைந்தபட்சம் டன்னுக்கு ரூபாய் 3,500 வழங்க வேண்டும். கரும்பு கொள்முதல் விலையை குவிண்டாலுக்கு ரூபாய் 2,000 என நிர்ணயித்து தமிழக அரசு வழங்க வேண்டும். பச்சை தேயிலை கொள்முதல் விலையை கிலோ ரூபாய் 25 என நிர்ணம் செய்ய வேண்டும்.

மக்கள் நலப்பணியாளர்கள் 13 ஆயிரம் பேருக்கும் அதிமுக அரசு மீண்டும் பணி வழங்க வேண்டும்.

அரிசி மற்றும் பருத்திக்கு விதிக்கப்பட்டுள்ள சேவை வரியை மத்திய அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.

தமிழகத்தில் சிதைந்து சின்னாபின்னமாகும் சட்டம் ஒழுங்கு நிலைக்கு திமுக மாநாட்டில் கண்டனம் தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

0 Responses to தூக்குத் தண்டனையை ரத்து செய்ய வேண்டும்! திமுக 10வது மாநில மாநாட்டில் 15 தீர்மானங்கள் நிறைவேற்றம்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com