இலங்கை அதிபர் ராஜபக்சவை போர்க்குற்றவாளியாக அறிவிக்கும் வகையில் ஐரோப்பிய ஒன்றியத்தில் புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்கள் மேற்கொண்டுள்ள முயற்சிகளை அனைத்துத் தரப்பினரும் ஆதரிக்க வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலர் வைகோ தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க இன்று வியாழக்கிழமை வந்த அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
மதிமுக வரலாற்றில் நடந்த 21 பொதுக்குழுக் கூட்டங்களை விட 22-வது பொதுக்குழு மிகவும் சிறப்பான பொதுக்குழுவாக அமைந்திருந்தது.
வருகிற 26 -ம் தேதி உலகத் தமிழர்கள் அனைவரும் இனப்படுகொலை செய்த ராஜபக்சவை சர்வதேச நீதிமன்றக் கூண்டில் ஏற்றி தமிழினத்தைப் படுகொலை செய்த குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என்ற ஐரோப்பிய ஒன்றியத்தில் புலம் பெயர்ந்த ஈழத்தமிழர்கள் எடுத்துள்ள முடிவை ஆதரிக்க வேண்டும் என்றார் வைகோ.
இதில், மாவட்டச் செயலர் க. சந்திரசேகரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
0 Responses to ராஜபக்ச போர்க்குற்றவாளி! புலம்பெயர் ஈழத்தமிழர்களின் முயற்சிகளை ஆதரிக்க வேண்டும்: வைகோ