பிரிட்டனில் தலைக்கு வெளியே மூளையுடன் பிறந்த பெண் குழந்தைக்கு அறுவைசிகிச்சை வெற்றிகரமாக நடந்துள்ளது.
பிரிட்டனை சேர்ந்த ஜெஸ்ஸிகா வில்லியம்ஸ்- ஆரன் மார்டின் தம்பதிகளின் குழந்தையே தலைக்கு வெளியே மூளையுடன் பிறந்துள்ளது.
இவர்களுக்கு ஏற்கனவே ஆண் குழந்தை உள்ள நிலையில், இரண்டாவதாக ஜெஸ்ஸிகா கர்ப்பமடைந்தார்.
கர்ப்பமடைந்த 17வது வாரத்தில், ஸ்கேன் எடுத்த பார்த்த போது, குழந்தையின் தலைக்கு வெளியே மூளை வெளிவந்து, தோலினால் சூழப்பட்டு இருப்பது தெரியவந்தது.
எனினும் தனது கருவை கலைக்க இயலாத ஜெஸ்ஸிக்கா, Royal Victoria Infirmary (RVI) என்ற மருத்துவமனையின் ஆலோசகரை நாடியுள்ளார்.
இதனையடுத்து கடந்தாண்டு அக்டோபர் மாதம் 13ம் திகதி, அறுவைசிகிச்சை மேற்கொண்டு தாயும், சேயும் பத்திரமாக காப்பாற்றப்பட்டனர்.
குழந்தைக்கு பெயித் மார்டின் என பெயரிட்டனர், பெயித் பிறந்த போது 6 செ.மீ-ஆக இருந்த மூளையின் சுற்றளவு, சிறிது சிறிதாக அதிகரிக்க தொடங்கியது.
எனவே கடந்த 10ம் திகதி மீண்டும் குழந்தைக்கு அறுவைசிகிச்சை செய்து, தலைக்கு வெளியே இருந்த மூளையை மருத்துவர்கள் சரிசெய்தனர்.
தற்போது குழந்தை நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதாக குழந்தையின் பெற்றோர் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.
0 Responses to தலைக்கு வெளியே மூளையுடன் பிறந்த குழந்தை! (படங்கள் இணைப்பு)