Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

படையினருடன் தொடர்புடையதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட ஆவா குழுவுடன் தொடர்புபட்டிருந்ததாக கூறி 24 வயதுடைய இளம் பெண் ஒருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். யாழ். மாவட்டத்தில் கொலை, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்த ஆவா  குழுவைச் சேர்ந்த 13 பேர் ஜனவரி மாதம் 6ஆம் திகதி கைதுசெய்யப்பட்டிருந்தனர்.

ஆவாக்குழவை சேர்ந்தவர்கள் கைதுசெய்யப்பட்டு பொலிஸ் நிலையத்தில் வைக்கப்பட்டபோது, அந்தக் குழுவினைச் சேர்ந்த இளைஞன் ஒருவருக்கு பெண்ணொருவர் உணவு கொண்டு வந்து கொடுத்துள்ளார். இதன்போது அவர் குறித்து விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வந்துள்ளனர். இந்நிலையில் குறிப்பிட்ட பெண் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு வந்த பொலிஸார், அப்பெண்ணை இன்று கைது செய்துள்ளனர். ஒரு பிள்ளையின் தாயொருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.  இவர் பதுங்கியிருந்த நிலையினில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் தரப்பு அறிவித்துள்ளது.

ஆவாக்குழுவினில் 10 பேரை நிபந்தனைகளில் அடிப்படையில் யாழ்.நீதவான் நீதிமன்ற நீதவான் பொ.சிவகுமார் விடுதலை செய்துள்ளார்.எனினும் ஆவாக் குழுவின் தலைவரான ஆவா வினோதன் தொடர் நீதிமன்றத்தந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

0 Responses to ஆவா குழுவைச்சேர்ந்த பெண் கைது! பதுங்கியிருந்தவரென்கிறது பொலிஸ்!!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com