Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஐ.நா. நோக்கிய நீதிக்கான நடைப்பயணமானது 18.02.2014 இன்று 21வது நாளாக 25km தூரத்தை கடந்து Phalsbourg நகரபிதாவினுடைய பணியகத்தை வந்தடைந்தது.

Phalsbourg நகரபிதாவினுடைய பணியகத்திற்கு முன்பாக ஊடகங்களுடனான சந்திப்புகள் இடம்பெற்றது என்பது குறிப்பிடத்தக்கதாகும். மனிதநேய பணியாளர்கள் கரடுமுரடான பாதைகளில் நடைப்பயணத்தை முன்னெடுப்பதால் துயரத்தையும் துன்பத்தையும் தாங்கி மாவீரர்களது கனவை மனதில் சுமந்தப்படி நடைப்பயணத்தை முன்னெடுக்கின்றார்கள். 

தமிழின அழிப்பை பல்லின மக்களுக்கு எடுத்துரைக்கும் முகமாக பல்வேறு மொழிகளில் துண்டுப்பிரசுரங்கள் வழங்கப்பட்டு வருகின்றது. மேலும் எதிர்வரும் 24.02.2014 திங்கள் அன்று நோர்வே நாட்டினுடைய பாராளுமன்ற முன்றலில் தமிழ் வண்டி பரப்புரை ஊர்தி பயணம் ஆரம்பமாகி பல நாடுகளை ஊடறுத்து 10.03.2013 அன்று ஐ.நா.வினுடைய மனிதவுரிமை மன்றத்தை சென்றடையவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

0 Responses to கரடுமுரடான பாதைகள் ஊடாக தொடர்கிறது நீதிக்கான நடைப்பயணம்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com