உண்மைக்கும் மீளமைப்புக்குமான ஆணைக்குழுவை சிறிலங்காவில் ஸ்தாபிப்பது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்துவதற்றாக, சிறிலங்கா அரசாங்கத்தின் பிரதிநிதிகள் குழு ஒன்று இந்த வாரம் தென்னாப்பிரிக்கா செல்கிறது.
தென்னாப்பிரிகாவின் ஜனாதிபதி கடந்த வருடம் பொதுநலவாய நாடுகளின் மாநாட்டில் கலந்துக் கொள்வதற்காக சிறிலங்கா வந்திருந்த போது, உண்மைக்கும், நல்லிணக்கத்துக்குமான ஆணைக்குழு குறித்து பரிந்துரைத்திருந்தார்.
இது தொடர்பில் ஜனாதிபதி மகிந்தராஜபக்ஸவுக்கும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதிகளுக்கும் அவர் விளக்கமளித்திருந்தார்.
சிறிலங்காவின் அரியல் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக இந்த ஆணைக்குழுவை நியமிக்குமாறு கோரப்பட்டிருந்தது.
இந்த நிலையில் அது தொடர்பான ஆலோசனையை பெற்றுக் கொள்வதற்காக சிறிலங்கா அரசாங்கத்தின் பிரதிநிதிகள் தென்னாப்பிரிக்கா செல்கின்றனர்.
அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தலைமையில் செல்லும் இந்த குழுவில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பிரதி அமைச்சர் பைசர் முஸ்தபா போன்றோர் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.




0 Responses to ஆணைக்குழு உருவாக்கம் ஆராய தென்னாபிரிக்கா செல்கிறது சிறீலங்காப் பிரதிநிதிகள் குழு!