Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

வடக்கில் இலங்கையின் தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படக்கூடிய வகையில், ஆறு ஆயுதக்குழுக்கள் இயங்கி வருவதாக இலங்கைப் புலனாய்வு பிரிவு புதிய கட்டுக்கதையொன்றினை அவிழ்த்து விட்டுள்ளது.

உடற்பயிற்சி நிலையம் என்ற பெயரில், பாரிய வீடுகளை வாடகைக்கு அமர்த்தி இந்தக் குழுக்கள் கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபட்டு வருகின்றன. பிரச்சினைகளை தீர்த்துக் கொடுக்க பணம் பெற்றுக்கொள்ளப்படுகிறது. ஆயுதங்களைப் பயன்படுத்தி குற்றச் செயல்களில் ஈடுபடும் இந்த குழுக்களுக்கு எதிராக அச்சம் காரணமாக மக்கள் புகார் செய்வதில்லை. குறித்த குழுக்களினால் மேற்கொள்ளப்படும் குற்றச்செயல்கள் தொடர்பில் இராணுவத்தின் மீதே குற்றம் சுமத்தப்பட்டிருந்தென அக்கட்டுக்கதையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரச புலனாய்வுப் பிரிவும், இராணுவப் புலனாய்வுப் பிரிவும் இது தொடர்பிலான விசாரணைகளை நடத்தி வருகின்றனர். யாழ்ப்பாணத்தின் பல இடங்களில் இந்தக் குழுக்கள் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருவதாகவும் சிங்கள ஊடகங்கள் ஊடாக இக்கட்டுக்கதை அரங்கேற்றப்பட்டு வருகின்றது.
எனினும் வடக்கில் இளைஞர்கள் அதிகம் ஒன்று சேரும் விளையாட்டரங்குகள் மற்றும் உடற்பயிற்சி மையங்களை முடக்க அரசு இத்தகைய கதைகளை அவிழ்த்து விட்டிருக்கலாமென சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளது.

0 Responses to வடக்கில் ஆறு ஆயுதக் குழுக்களாம்! இலங்கை அரசு அவிழ்த்து விடுகின்றது கட்டுக்கதைகள்!!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com