Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஈழத் தமிழர் இன விடுதலை நோக்கிய போர் - A Gun A Ring

பதிந்தவர்: ஈழப்பிரியா 21 February 2014

முப்பது ஆண்டுகளைக் கடந்த ஈழத் தமிழர் இன விடுதலை நோக்கிய போர் ஒரு பெரும் அழிவோடு சுடுகாடாய்க் கிடப்பதனை மிகவும் தத்ரூபமாக சொல்லியிருக்கும் திரைப்படம் A Gun A Ring.

அழிவின் எச்சங்கள் ஐந்து ஆண்டுகளைத் தொட்டும் அப்படியே இருக்க, இந்த நீண்ட போரின் முந்திய அத்தியாங்களிலிருந்து பாதிக்கப்பட்டுத் தப்பிப் பிழைத்தவர்களிலிருந்து பயணிக்கிறது A Gun and A Ring திரைப்படம்.

போரிலிருந்து தப்பிப் பிழைத்து புலப்பெயர்வு கடந்தும் இந்தப் போரின் எச்சங்கள் எந்தவகையிலும் களைந்தெறிய முடியாத உளவியல் ரீதியான தாக்கத்தை ஏற்படுத்துவதை ஒரு பக்கமும், இன்னொரு பக்கம் இந்த மனிதர்கள் ஒவ்வொருவரினதும் தீர்க்கப்படாத கணக்கையும் வைத்துப் பின்னப்பட்டிருக்கிறது இத்திரைப்படம்.

1999 என்ற திரைப்படத்தின் மூலமாகப் பரவலாக அறியப்பட்ட இயக்குனர் லெனின் எம்.சிவம் அவர்கள்  கனடாவாழ் புலம்பெயர்வு மக்களின் வலியை திரைப்படமாக்கியுள்ளார் அதுவே  A Gun & A Ring. பலரது பாராட்டையும் பெற்ற இத்திரைப்படம் லண்டன் Cineworld Wembley திரையரங்கில் எதிர்வரும் 22ம் திகதி அதாவது நாளை திரையிடப்படவுள்ளது.

மக்களின் ஏகோபித்த பாராட்டுக்களை பெற்ற A Gun A Ring திரைப்படம் - கனடா, அவுஸ்திரேலியா, ஃபிரான்ஸ், சுவிஸ் என பல நாடுகளைத் தொடர்ந்து இப்போது பிரித்தானியாவுக்கு வருகிறது.

ஒவ்வொரு புலம்பெயர் தமிழனும் பார்க்கவேண்டிய உணர்வுபூர்வமான படம்  A Gun and  A Ring.

இத் திரைப்படம் தொடர்பில் இப்படத்தின் இயக்குனர் லெனின், மற்றும் தயாரிப்பாளர் விஸ்ணு ஆகியோரின் கருத்துக்கள் அடங்கிய காணொளி.

0 Responses to ஈழத் தமிழர் இன விடுதலை நோக்கிய போர் - A Gun A Ring

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com