Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இன்றைய ராசி பலன் | 11.03.2014

பதிந்தவர்: தம்பியன் 11 March 2014

மேஷம்
நல்ல காரியம் இல்லத்தில் நடைபெறும் நாள். புதிய நபர்களின் அறிமுகத்தால் பொருளாதார நிலையை உயர்த்திக் கொள்வீர்கள். வாகன யோகம் உண்டு. வருமானம் போதுமானதாக இருக்கும்.

ரிஷபம்
உள்ளம் மகிழும் விதத்தில் உதிரி வருமானங்கள் வந்து சேரும் நாள். பொழுதுபோக்கு, உல்லாச நிகழ்ச்சிகளில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். சகோதர ஒற்றுமை பலப்படும். அஞ்சல் வழி அனுகூலம் உண்டு.

மிதுனம்
மனமாற்றம் ஏற்படும் நாள். உடல் நலத்திற்காக சிறிது செலவிடும் சூழ்நிலை உருவாகும். பிற்பகலில் பணவரவுகள் திருப்தி தரும். மனப்பயம் அகலும். புதிய தொழில் தொடங்கும் திட்டத்தை நிறைவேற்றுவீர்கள்.

கடகம்
பாடுபட்டதற்கேற்ற பலன் கிடைக்கும் நாள். பக்கத்தில் இருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. சுபச் செலவுகள் அதிகரிக்கும். நீண்ட நாட்களாக சந்திக்க நினைத்த உறவினர் ஒருவரை சந்தித்து மகிழும் வாய்ப்பு கிட்டும்.

சிம்மம்
அரசியல்வாதிகளால் அனுகூலம் கிடைக்கும் நாள். இருப்பினும் அடுத்தடுத்த செலவுகளால் திணறுவீர்கள். பழைய நல்ல சம்பவங்களை அசைபோட்டு பார்ப்பீர்கள். சொந்த பந்தங்களின் சந்திப்பு உண்டு.

கன்னி
பிரபலமானவர்களின் உதவி கிடைத்து மகிழும் நாள். தூர தேசத்திலிருந்து அனுகூலச் செய்தி வந்து சேரும். புதிய ஆடை, அலங்காரப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தொழில் முன்னேற்றம் ஏற்படும்.

துலாம்
நேற்றைய பிரச்சினை நல்ல முடிவிற்கு வரும் நாள். குடும்பத்தினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். வெளிவட்டார பழக்க வழக்கம் விரிவடையும். வியாபார விருத்திக்கு வித்திடுவீர்கள்.

விருச்சகம்
கனிவான பேச்சுக்களால் காரியங்களைச் சாதித்துக் கொள்ள வேண்டிய நாள். யாரைச் சந்திக்க வேண்டுமென்று நினைத்தீர்களோ அவர்களே உங்களைத் தேடி வரலாம். வரவும் செலவும் சமமாகும்.

தனுசு
ஆலய வழிபாட்டினால் ஆனந்தம் காண வேண்டிய நாள். பொழுது போக்கு விஷயங்களில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். சுபச் செய்தியன்று சுற்றத்தார் மூலம் வந்து சேரலாம். கனவு பலிதம் உண்டு.

மகரம்
அருகிலுள்ளவர்களை அனுசரித்துச் செல்ல வேண்டிய நாள். உத்தியோக மாற்றம் எதிர்பார்த்த படியே வந்து சேரலாம். மறைமுகப் போட்டிகளை சமாளிப்பீர்கள். கடன் சுமை குறையும்.

கும்பம்
பிள்ளைகளின் வழியில் நல்ல செய்திகள் வந்து சேரும் நாள். இல்லத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். ஆரோக்யம் சீராகி ஆனந்தப்படுத்தும். எதிரிகள் விலகுவர். உத்தியோக முன்னேற்றம் உண்டு.

மீனம்
கலகலப்பான செய்தி வந்து சேரும் நாள். குடும்ப முன்னேற்றம் கருதி ஸ்தல வழிபாடுகளை மேற்கொள்வீர்கள். தாய்வழி ஆதரவு பெருகும். தொழில் ரீதியாக எடுத்த முயற்சி வெற்றி பெறும்.

0 Responses to இன்றைய ராசி பலன் | 11.03.2014

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com