Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இந்தியாவின் 16வது நாடாளுமன்றத் தேர்தல் ஏப்ரல் 24ம் திகதி தொடங்குகிறது. தமிழகத்தில் அதிமுக, காங்கிரஸ் கட்சிகள் தனித்தே போட்டியிட முடிவு செய்துள்ளன.

 தேமுதிக பாஜகவுடன் இணைந்து போட்டியிடும் என தெரிவிக்கப்படுகின்ற போதும் இன்னமும் தொகுதிப் பங்கீடு முற்றுப்பெறவில்லை.

இந்நிலையில், தேமுதிக தலைவர் விஜயகாந்த் எதிர்வரும் மார்ச் 14ம் திகதி 14 நாட்களுக்கு தனது முதற்கட்ட தேர்தல் பிரச்சார சுற்றுப் பயணத்தை மேற்கொள்கிறார். இதன் போது 40 தொகுதிகளுக்கும் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார்.

தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 40 பாராளுமன்றத் தொகுதிகளிலும் அதிமுக தனித்துப் போட்டியிடுகிறது. திமுக தலைமையிலான ஜனநாயக முற்போக்கு கூட்டணியில், விடுதலை சிறுத்தைகள், புதிய தமிழகம், மனித நேய மக்கள் கட்சி, இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் ஆகியன இணைந்து போட்டியிடுகின்றன.
திமுக நேரடியாக 35 தொகுதிகளில் தனித்துக் களமிறங்குகிறது.  பாராளுமன்றத் தேர்தல் வரலாற்றில், அதிமுக - திமுக அதிகப்படியான தொகுதிகளில் தனித்து மோதுவது (35 தொகுதிகள்) இதுவே முதன்முறையாகும்.

 இதேவேளை இம்முறை தமிழகத் தேர்தலில் காங்கிரஸும் தனித்துக் களமிறங்குகிறது. தமிழக மீனவர் பிரச்சினை, இலங்கைத் தமிழர்  விவகாரம், விலைவாசி உயர்வு மற்றும் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களின் விடுதலையை எதிர்த்த விவகாரத்தால் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி சேர எந்தக் கட்சியும் முன்வரவில்லை.

எனினும் திமுக, அதிமுக மற்றும் பாஜகவுக்கு பதிலடி கொடுக்க காங்கிரஸ் கட்சி 1991ம் ஆண்டு தேர்தலில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய ராஜீவ் படுகொலை விவகாரத்தை மீண்டும் இந்த மக்களவைத் தேர்தலில் கையில் எடுக்க திட்டமிட்டுள்ளது. அதாவது, ராஜீவுடன் படுகொலையான போலீஸ் அதிகாரிகள், பொதுமக்களின் உறவினர்களையும், பிரச்சாரத்தில் ஈடுபடுத்தவுள்ளதாக தெரிவித்துள்ளது.

0 Responses to நாடாளுமன்றத் தேர்தல் : தமிழகத்தில் போட்டியிடும் கட்சிகளின் நிலவரம்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com