மக்களவைத் தேர்தலில் பாஜகவைத் தவிர வேறு கட்சிகளுக்குப் பிரச்சாரம் செய்யப் போவதில்லை என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
தேமுதிக, பாஜகவுடன் கூட்டணி வைத்துக் கொள்வது ஏறக்குறைய உறுதி என்றாகிவிட்ட நிலையில், இப்போது தேமுதிக தலைவர் விஜயாகாந்த் மேற்கண்டவாறு கூறி இருப்பது பாஜக கூட்டணிக் கட்சிகளிடையே புதிய குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் தேமுதிக, பாமக, ஐஜேகே, மதிமுக போன்ற கட்சிகளிடையே தொகுதிப் பங்கீடு இழுபறி இன்னமும் நீடித்து வருகிறது.
இன்னும் ஓரிரு நாட்களில் கூட்டணிக் கட்சிகளிடையேயான தொகுதிப் பங்கீடு முடிவடைந்து விடும் என்று பாஜகவின் மாநிலத்தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறி நான்கு நாட்கள் ஆகிய நிலையிலும் கூட்டணிக் கட்சிகளிடையே தொகுதிப் பங்கீடு இன்னமும் முடிந்தபாடில்லை. இதற்குக் காரணம் பாமக கேட்கும் தொகுதிகளை தேமுதிகவும் விடாப்பிடியாக கேட்டுக் கொண்டு இருப்பதுதான் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில்தான் விஜயகாந்த் பாஜக தவிர கூட்டணியில் அங்கம் வகிக்கும் வேறுக் கட்சிகளுக்குப் பிரச்சாரம் செய்யப் போவதில்லை என்று கூறி, அணிக்குள் புதிய குழப்ப நிலையை ஏற்படுத்தி இருக்கிறார்.

0 Responses to பாஜகவைத் தவிர வேறு கட்சிகளுக்குப் பிரச்சாரம் செய்யப் போவதில்லை!:விஜயகாந்த்