Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் மாநாட்டில் முன்வைக்கப்பட வேண்டிய மாதிரி பிரேரணை ஒன்றை தமிழகத்தில் இயங்கும் மே 17 இயக்கம் தயாரித்துள்ளது.

இதற்கு 18க்கும் அதிகமான அமைப்புகள் ஆதரவளித்துள்ளதாக அந்த இயக்கத்தின் இணைப்பாளர் உமர் தெரிவித்துள்ளார். தற்போது ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்கா முன்வைத்துள்ள பிரேரணையானது, இலங்கை அரசாங்கம் மறைமுகமாக பாதுகாக்கிறது.

அத்துடன் தமிழ் இனத்தை, சமயம் சார்ந்த சிறுபான்மை குழு ஒன்று சித்தரிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இது கடந்த முறை தாக்கல் செய்யப்பட்ட பிரேரணையை விட வலுவிழந்த ஒன்று.

அத்துடன் வடக்கில் இராணுவத்தை நிலைகொள்ள செய்வதையும் நியாயப்படுத்தும் வகையில் அமைந்திருக்கிறது என்று அவர் தெரிவித்துள்ளார். 

எனவே இலங்கைக்கு எதிராக சர்வதேச யுத்தக் குற்ற விசாரணையை வலியுறுத்தியும், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மனித உரிமை நிலைவரங்கள் தொடர்பில் ஆய்வு நடத்துவதற்கான பிரதிநிதி ஒருவரை நியமிக்குமாறும் தெரிவித்து, மாதிரி பிரேரணை ஒன்றை தாங்கள் தயாரித்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

0 Responses to இலங்கைக்கு எதிரான பிரேரணையின் மாதிரி வடித்தை மே17 இயக்கம் தயாரித்துள்ளது

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com