Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஜக்கிய தேசியக்கட்சியின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மஹிந்த தரப்புடன் நெருங்கிய உறவை பேணிவருபவருமான விஜயகலா மகேஸ்வரனையும் படையினர் வாகனத்திலிருந்து இறக்கி சோதனை செய்ய முற்பட்ட விவகாரம்  சூடுபிடித்துள்ளது.

யாழ்ப்பாணம் காக்கை தீவில் இராணுவத்தினர் வீதிச் சோதனைகளை மேற்கொண்டிருந்தபோது, அந்த வீதியால் வந்திருந்த ஐக்கிய் பாராளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரனையும் தடுத்து நிறுத்தினர்.

இதனையடுத்து அங்கிருந்த பொலிஸ் மற்றும் இராணுவத்தினருடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்ட பாராளுமன்ற உறுப்பினர் அச்சுறுத்தல்களின் மூலம் தமிழ் மக்களை யாருமே அடக்க முடியாதென்றும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மேலும் தெரியவருகையினில் நேற்றைய தினம் காரைநகருக்குச் செல்லும் பிரதான வீதியான காக்கை தீவு வீதிச் சந்தியில் இராணுவத்தினர்; சோதனைகளை ஆரம்பித்திருந்தனர். இதன்போது அந்த வீதியால் பெருமளவானோர் மறித்து வைக்கப்பட்டு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. இதன்போது அந்த வீதியால் வந்திருந்த பாராளுமன்ற உறுப்பினரும் இராணுவத்தினரால் மறிக்கப்பட்டிருந்தார்.

இதனையடுத்து இங்கு ஏன் எதற்காக மறிக்கின்றீர்கள் என்று அங்கிருந்த பொலிஸாரைக் கேட்ட பாராளுமன்ற உறுப்பினர், பொலிஸ் சோதனைகள் மேற்கொள்வதாயின் எதற்காக இராணுவத்தினரை ஈடுபடுத்த ஏன் வேண்டும் என்றும் கேள்வியெழுப்பியிருந்தார். ஆகவே, இங்கு பொது மக்களை மறித்து சோதனை செய்வது நிறுத்தப்பட வேண்மென்றும், அச்சுறுத்தல்கள், அடக்கு முறைகளின் மூலமாக தமிழ் மக்களை ஒரு போதும் அடக்கவோ அல்லது பணிய வைக்க முடியாதென்றும் பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார்.

0 Responses to வீதிச்சோதனையில் இராணுவத்தினர் ஈடுபடமுடியாது! ஜ.தே.கவின் விஜயகலா எம்.பி. சீற்றம்!!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com