Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

குரு பெயர்ச்சி பலன்கள் 2014 – 2015 (சிம்மம்)

பதிந்தவர்: தம்பியன் 25 March 2014

சிம்ம இராசி அன்பர்களே…

19.6.2014 வியாழன் அன்று குரு பகவான் உங்கள் இராசிக்கு 12-ம் இடத்திற்கு வந்து அமர்கிறார்.

அதாவது கடகத்தில் பட்டா போட்டு அமரப் போகிறார்.

“அய்யய்யோ 12-ல் குரு இருக்கலாமோ” என்று சிலர் பயப்படுவர். பயமே வேண்டாம்.

அந்த குருபகவான் உங்கள் இராசிக்கு 5-ம் வீடு, 8-வீட்டின் அதிபதி.

ஆகவே 8-க்குரிய குரு, 12-ல் வந்தால் இராஜயோகத்தை கொடுப்பார்.

அதாவது 8-க்குரியவன் 12-ல் வந்தால், “விபரீத இராஜயோகம்”. இனி தொட்டது துலங்கும்.

உங்களை தூக்கி எறிந்தவர்கள், உங்கள் முன் தலை வணங்குவார்கள்.

குரு உங்கள் இராசிக்கு 4-ம் இடம், 6-ம் இடம், 8-ம் இடங்களை பார்வை செய்து, அந்த இடங்களை யோகம் பெறச் செய்கிறார்.

ஆகவே தடைபட்ட மேல் படிப்பு தொடரும். தகர டப்பா வண்டியை ஒரங்கட்டிவிட்டு, புதிய வாகனம் வாங்கும் யோகும் உண்டு.

சொந்த வீடு இல்லையே என்ற புலம்பல் தீரும். கடன் தொல்லை பெரும் அளவில் தொலையும்.

தீராத ரோகம் தீரும். கோர்ட், கேஸ் இவைகளில் வெற்றி கொடுக்கும்.

இருப்பினும், பூர்வீக சொத்து இருந்தால் அதனால் பிரச்னை வர வாய்ப்புள்ளது.

குடும்ப ஸ்தானத்திற்கு லாபத்தில் குரு இருப்பதால், குடும்ப வாழ்க்கை அமையும்.

தெய்வ தரிசனம் அதிகரிக்கும். பிரயாணங்கள் அதிகரிக்கும்.

ஜீவனத்திற்கு 7-ம் இடம் பார்வை பெறுவதால், பங்கு வர்த்தகத்தில் யோகத்தை கொடுக்கும்.

கூட்டுதொழில் லாபம் உண்டு. புத்திரஸ்தானத்திற்கு 4-ம் இடம் குரு பார்வை பெறுவதால், புத்திர- புத்திரிகளுக்கு திருமண முயற்சிகள் கைகூடும்.

முக்கியமாக கஷ்டங்களை கொடுக்கும் அஷ்டம ஸ்தானம், குருவின் பார்வை பெறுவதால் வரும் கஷ்டங்கள் காற்றோடு ஓடி விடும்.

உறவினர் வருகையும், அவர்களால் ஆதாயமும் பெறுவீர்கள். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் எதிர்பாராமல் நடக்கும்.

பொதுவாக 12-ல் அமர்ந்த குரு, வதைக்க மாட்டார். வாழ வழி வகுப்பார்.

இது என் கருத்து. ஸ்ரீவீரலஷ்மியின் அருட்பார்வை உங்களுக்கு நிறைந்திருக்கிறது.

விநாயகரையும், தட்சிணாமூர்த்தியையும், குருபகவானையும் வணங்கி முன்னேறுங்கள்.

குரு பெயர்ச்சி வாழ்த்துக்கள்.

0 Responses to குரு பெயர்ச்சி பலன்கள் 2014 – 2015 (சிம்மம்)

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com