Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

வடக்கு மாகாணசபையினது பாதுகாப்பு தொடர்பினில் எடுத்து கூற வருகை தந்திருந்த யாழ். கட்டளைத் தளபதி உதய பெரேராவிடம் வடக்கின் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளமைக்கு மாகாண முதலமைச்சர் சீ.வீ.விக்னேஸ்வரன் எதிர்ப்பை வெளியிட்டுள்ளார். வடக்கின் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளமை வருத்தமளிப்பதாக முதலமைச்சர், யாழ். கட்டளைத் தளபதி உதய பெரேராவிடம் தெரிவித்துள்ளார். வடக்கில் மீளவும் கடுமையாக இராணுவம் குவிக்கப்படுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.      

வடக்கில் அதிகளவில் இராணுவத்தினரை குவிப்பதனாது மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதேவேளை. வடக்கின் பல பகுதிகளில் பாதுகாப்பு படையினர் சுற்றி வளைப்புக்கைள மேற்கொண்டு வருவதாகவும், இளைஞர் யுவதிகள் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. புனர்வாழ்வு அளிக்கப்பட்ட முன்னாள் போராளிகளையும் இராணுவ முகாம்கள் காவல் நிலையங்களுக்கு நாளை காலை சமூகமளிக்குமாறு அழைப்புவிடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

0 Responses to இராணுவக்குவிப்பிற்கு முதலமைச்சர் எதிர்ப்பு!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com