நளினி உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய முன்வந்த தமிழக அரசின் செயல் உள்நோக்கம் கொண்டது என்று, மத்திய அரசு தரப்பு வழக்கறிஞர் வாதம் செய்துள்ளார்.
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தொடர்புள்ளதாக குற்றம்சாட்டப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்ட மூவரின் தூக்குத் தண்டனையை உச்ச நீதிமன்றம் கடந்த இரு மாதங்களுக்கு முன்பு ரத்து செய்து தீர்ப்பு வழங்கியது. இதை அடுத்து தமிழக அரசு தாமாக முன் வந்து, இவர்கள் மூவர் மற்றும் ஏற்கனவே சிறையில் ஆயுள் தண்டனைக் கைதிகளாக இருக்கும் நளினி உள்ளிட்ட 4 பேரையும் சேர்த்து மொத்தம் 7 பேரையும் தமிழக அரசு விடுதலை செய்ய முன்வந்தது.
இது செல்லாது என்றும், இதை ரத்து செய்ய வேண்டுமென்றும் மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் மனுத் தொடுத்திருந்தது. இந்த மனுவின் மீதான விசாரணை தற்போது நடைப்பெற்றுக் கொண்டிருக்கும் நிலையில், இன்று மத்திய அரசு தரப்பில் வாதாடிய வழக்கறிஞர், தமிழக அரசு தாமாக முன்வந்து மேற்கண்ட 7 பேரையும் விடுதலை செய்ய முன்வந்தது எனபது உள்நோக்கம் கொண்ட செயல் என்றும், குற்றவாளிகள் மீது ஆயுதம் வைத்திருந்தது, பாஸ்புக் வைத்திருந்தது உள்ளிட்ட குற்றங்கள் பதிவாகியுள்ளது என்பதால், இவர்களை விடுதலை செய்யும் அதிகாரம் மாநில அரசுக்கு இல்லை என்று வாதிட்டுள்ளார். இதை அடுத்து தமிழக அரசு தரப்பு வழக்கறிஞரின் வாதம் இன்று பிற்பகல் இருக்கும் என்று தெரிய வருகிறது.
0 Responses to நளினி உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய முன்வந்தது உள்நோக்கம் கொண்டது: அரசு தரப்பு வழக்கறிஞர்