மேல் மற்றும் தென் மாகாண சபைகளுக்கான தேர்தல் வாக்களிப்பு இன்று சனிக்கிழமை காலை 07 மணிக்கு ஆரம்பமாகியுள்ளது. காலை ஆரம்பித்துள்ள வாக்களிப்பு மாலை 04 மணிக்கு நிறைவுக்கு வரும் என்று தேர்தல்கள் செயலகம் அறிவித்துள்ளது.
இரு மாகாண சபைகளுக்குமாக 155 உறுப்பினர்களை தேர்வு செய்ய நடைபெறும் இன்றை தேர்தலில் மொத்தமாக 3794 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். சுமார் 25000 பொலிஸார் தேர்தல் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு, ஐக்கிய தேசியக் கட்சி, மக்கள் விடுதலை முன்னணி, ஜனநாயகக் கட்சி, ஜனநாயக மக்கள் முன்னணி உள்ளிட்ட கட்சிகள் இந்தத் தேர்தல்களில் போட்டியிடும் பிரதான கட்சிகளாகும்.
இன்று மாலை 04.00 மணிக்கு தேர்தல் வாக்களிப்பு நிறைவடைந்ததும், வாக்குப் பெட்டிகள் வாக்கு எண்ணும் மத்திய நிலையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு இரவு 07 மணியளவில் வாக்கு எண்ணும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கும் என்று தேர்தல்கள் செயகலம் அறிவித்துள்ளது. அத்தோடு, முதலாவது முடிவு இன்று நள்ளிரவு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

0 Responses to மேல் மற்றும் தென் மாகாண சபைகளுக்கான தேர்தல்: காலை 7 மணிக்கு வாக்களிப்பு ஆரம்பித்தது!