Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

எதிர்வரும் மக்களவைத் தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் கட்சி 'உங்கள் குரல் எங்கள் வாக்குறுதி' எனும் தலைப்பில் 49 பக்கங்களைக் கொண்ட தேர்தல் அறிக்கையை தயாரித்துள்ளது.

டெல்லியில் நேற்று காங்கிரஸ் தலைவர் சோனியா, பிரதமர் மன்மோகன் சிங், ராகுல் காந்தி ஆகிய மூவரும் தேர்தல் அறிக்கையை வெளியிட்டனர். இதில் அடுத்த 3 ஆண்டுகளில் 8%வீத பொளாதார வளி, 10 கோடி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு, பணவீக்கம், விலைவாசி கட்டுப்படுத்தப்படும், தனியார் நிறுவன வேலை வாய்ப்புக்களில் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு இட ஒதுக்கீடு, 70 கோடி பேரை நடுத்தர வருமான மக்களாக தரம் உயர்த்துதல், அனைவருக்கும் வங்கிக் கணக்கு இருப்பதை உறுதி செய்தல், 19 மாதங்களில் அனைத்து பஞ்சாயத்துக்களும் அகண்ட அலைவரிசை சேவையுடன் இணைக்கப்படுதல் போன்ற பல புதிய வாக்குறுதிகள் வழங்கப்பட்டுள்ளன.

எனினும் 2009ம் ஆண்டு காங்கிரஸ் தேர்தலின் போது சொன்ன பழைய வாக்குறுதிகள் பலவும் மீண்டும் இடம்பெற்றுள்ளன எனவும், மேலும் இலங்கைத் தமிழர்  விவகாரம், அந்நிய நேரடி முதலீடு போன்ற விவகாரங்களில் காங்கிரஸின் கொள்கை என்ன என தெளிவுபடுத்தப்படவில்லை எனவும், 2009ம் ஆண்டு தேர்தலின் போது அறிவிக்கப்பட்ட வாக்குறுதிகளில் எத்தனை நிறைவேற்றப்பட்டன என்பதிலும் தெளிவு இல்லை எனவும் நிபுணர்கள் கூறுகின்றனர்.

குறிப்பாக இலங்கைத் தமிழர் விவகாரத்தில் இலங்கைத் தமிழர்கள் அந்நாட்டு சட்டத்தின் கீழ் சம உரிமையுடன் வாழ்வதற்கு அந்நாட்டு அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தப்படும். 13-வது சட்ட திருத்தத்தை அமல்படுத்தவும், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு தன்னாட்சி அதிகாரம் வழங்கவும் வலியுறுத்தப்படும். இறுதிக்கட்ட போரின் போது நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து கால நிர்ணயம் செய்து விசாரணை நடத்த பிற நாடுகளுடன் சேர்ந்து இலங்கையை நிர்பந்திப்போம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை தேர்தலுக்கு முன்னதான கருத்துக் கணிப்பில் நம்பிக்கையில்லை என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.  கடந்த 2004, 2009ஆம் ஆண்டு தேர்தல்களிலும் காங்கிரஸ் தோல்வியடையும் என கருத்துக் கணிப்புகள் தெரிவித்தன. ஆனால், காங்கிரஸ் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்றது. அதுபோல், இம்முறையும் கருத்துக் கணிப்புகள் நிச்சயம் பலிக்கப் போவதில்லை. தேர்தல் முடிவுகள் அனைவருக்கும் ஆச்சரியம் அளிக்கும் வகையில் இருக்கும் என அவர் கூறியுள்ளார்.

0 Responses to காங்கிரஸின் தேர்தல் அறிக்கையில் புதிய வாக்குறுதிகள்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com