மேல் மாகாண சபைத் தேர்தலில் ஜனநாயக மக்கள் முன்னணியின் சார்பில் போட்டியிட்ட கட்சியின் தலைவர் மனோ கணேசனும், சிரேஷ்ட உறுப்பினர் சண். குகவரதனும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று முந்தினம் சனிக்கிழமை இடம்பெற்ற மேல் மாகாண சபைக்கான தேர்தலில் முடிவுகள் நேற்று ஞாயிற்றுக்கிழமை வெளியாகியிருந்தது. இந்த நிலையில், கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்குகளின் பிரகாரம் விரும்பு வாக்கு எண்ணும் நடவடிக்கையும் நேற்று இரவு வரையில் தொடர்ந்தது.
அதன் பிரகாரம், ஜனநாயக மக்கள் முன்னணியின் சார்பில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்ட மனோ கணேசனும், சண். குகவரதனும் அதிகப்படியான விருப்பு வாக்குகளைப் பெற்று தெரிவாகியுள்ளனர்.
கொழும்பு மாவட்டத்தில் ஜனநாயக மக்கள் முன்னணி சுமார் 44,000 வாக்குகளைப் பெற்று இரண்டு ஆசனங்களைப் பெற்றுக் கொண்டமை சுட்டிக்காட்டத்தக்கது.
0 Responses to மேல் மாகாண சபைக்கு ஜ.ம.மு.வின் சார்பில் மனோவும், குகவரதனும் தெரிவு!