தமிழ் மாணவர்கள் மற்றும் இளைஞரகள் கூட்டமைப்பைச் சேர்ந்த சுமார் 30 மாணவர்கள் சென்னை அடையாரில் உள்ள ஐ.நா அலுவலகத்தை சுமார் 11.00 மணி அளவில் திடீரென முற்றுகையிட்டனர். பிறகு திடீரென அலுவலகத்தில் உள்ளே நுழைந்த மாணவர்கள் அங்கு இருந்த ஐ.நா அவையின் கொடிகளை அகற்றினர்.
மாணவர்கள் யாரும் எதிர்பாராத வகையில் உள்நுழைந்து உள்பக்கமாக அனைத்து கதவுகளுக்கு பூட்டு போட்டனர். அவர்கள் ஐ.நா அலுவலகத்தின் உள்ளே காலவரையற்ற உண்ணாவிரதத்தை துவங்கினர். இலங்கைக்கு ஆதரவான ஐ.நா வின் தீர்மானத்தை எதிர்த்தும், பொது வாக்கெடுப்பு மற்றும் இனப்படுகொலைக்கு எதிரான பன்னாட்டு விசாரணை கோரியும் அவர்கள் இந்த உண்ணாவிரதத்தை ஐ.நா அலுவலகத்தின் உள்ளே துவங்கினர்! தற்போது போலிசாரால் கைது செய்யப்பட்டு பெசன்ட் நகர் காவல் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளனர்.

0 Responses to சென்னையில் ஐநா அலுவலகம் முற்றுகையிட்டு பூட்டு போட்ட மாணவர்கள்!