Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மலேசிய அரசு மற்றும் மலேசியன் ஏர்லைன்ஸ் மீது வழக்குத் தொடர மாயமான விமானத்தில் பயணித்தவர்களின் உறவினர்கள் முடிவு செய்துள்ளனர்.

கடந்த வாரம் மலேசியாவில் இருந்து சீனாவுக்குப் புறப்பட்ட மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் திடீரென்று மயமானது. இன்றுவரை 239 பயணிகளுடன் பயணித்த அந்த விமானத்தின் கதி என்னவாயிற்று என்று தகவல் இல்லை.முதலில் வியட்நாம் அருகே கடலில் விமானம் விழுந்து விபத்து நேர்ந்து இருக்கலாம் எனும் முடிவில் அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட 10 நாடுகள் கப்பலைத் தேடும் பணியில் ஈடுபட்டன. பின்னர் அந்தமான் அருகே கடலில் விழுந்து விபத்து நேரிட்டிருக்கலாம் என்கிற கோணத்தில் இந்தியாவும் விமானத்தைத் தேடும் பணியில் ஈடுபட்டது.

இந்நிலையில் விமானம் கடத்தப்பட்டு இருக்கலாம் என்று மலேசிய அரசு கருதுவதால், இந்தியாவை கப்பலைத்தேடும் முயற்சியை கைவிடும்படி மலேசிய அரசு கேட்டுக்கொண்டது. அதன்படி இந்தியாவும் இன்று விமானத்தைத் தேடும் முயற்சியை கைவிட்டு, கப்பல்கள்  கரைக்குத் திரும்பியுள்ளன. கூடவே ஜப்பானும், வியட்நாமும் விமானத்தைத் தேடும் பணியை தாமாக நிறுத்திக் கொண்டுள்ளன. மலேசிய அரசு, விமானம் குறித்த உண்மை நிலவரத்தைத் தெரிவிக்க மறுக்கிறது என்று அவ்விரு நாடுகளும் காரணம் தெரிவித்துள்ளன.

இந்நிலையில் காணமல் போன விமானத்தில் பயணித்தவர்களின் சீன உறவினர்கள் மலேசிய அரசு, மற்றும் மலேசியன் ஏர்லைன்ஸ் மீது வழக்குத்தொடர உள்ளதாக தெரிவித்துள்ளனர். மலேசிய அரசு உண்மைத்தகவலை தெரிவிக்க வேண்டுமென்பது இவர்களின் கோரிக்கையாக உள்ளது.

0 Responses to மலேசிய அரசு மற்றும் மலேசியன் ஏர்லைன்ஸ் மீது வழக்குத் தொடர முடிவு!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com