காணாமல் போன மலேசிய விமானம் கடலில் மூழ்கியதற்கு ஆதாரம் கேட்கிறது சீன அரசு. 18 நாட்களுக்கு முன்னர் காணமல் போன மலேசிய விமானம், இந்தியப்
பெருங்கடலின் தெற்குப் பகுதியில் விழுந்து விபத்து நேரிட்டுள்ளது என்று,
மலேசியப் பிரதமர் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்ததோடு, விமானத்தில்
பயணித்த 239 பேரும் உயிர்த் தப்பித்திருக்க வாய்ப்பில்லை என்றும், அவர்கள்
குடும்பத்தினருக்கு மலேசிய அரசு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து கொள்கிறது
என்றும் அறிவித்திருந்தார்.
விமானம் பற்றிய மேலதிக செய்திகள்!
இதை அடுத்து மலேசிய விமானம் கடலில் மூழ்கியதற்கான ஆதாரத்தை சீன அரசு கேட்டுக் கொண்டுள்ளது. காணாமல் போன விமானத்தின் பாகங்களைத் தேடும் பணியில் அமெரிக்க அரசு புதிய தொழில் நுட்பத்துடன் கூடிய கப்பல்களை இந்தியப் பெருங்கடலுக்கு அனுப்பி வைத்துள்ளது. இந்நிலையில் இன்று மோசமான வானிலை நிலவுவதாக கப்பல்கள் விமானத்தை தேடும் பணியை நிறுத்தி வைத்துள்ளன. விமானத்தின் கறுப்புப் பெட்டியை தேடும் பணிகள் முடுக்கிவிடப்படும் என்று மலேசிய அரசு தெரிவித்திருக்கிறது.

0 Responses to விமானம் கடலில் மூழ்கியதற்கு ஆதாரம் கேட்கிறது சீனா!