Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சர்வதேச விசாரணையொன்றை நடத்துமளவுக்கு நாட்டில் மனித உரிமை மீறல்கள் ஏதும் நடைபெறவில்லை என்று இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.

அமெரிக்கா உள்ளிட்ட மேற்கு நாடுகள் அரசியல் ரீதியாக இலங்கையை பலமிழக்கச் செய்வதற்காகவே இவ்வாறான சர்வதேச விசாரணை தீர்மானங்களை முன்வைப்பதாகவும் இலங்கை அரசாங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.

கொழும்பில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கத்தின் பிரதம கொறடாவும், அமைச்சருமான நிமல் சிறிபால டி சில்வா மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அங்கு மேலும் கருத்து வெளியிட்ட அவர், ‘அமெரிக்கா, பிரித்தானியா உள்ளிட்ட பலம்மிக்க நாடுகளின் பலத்துக்கும் அதிகாரத்துக்கும் அடிபணியாமல் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவைக் கூட்டத் தொடரில் உண்மைக்கும், நியாயத்துக்குமாக போராடுகின்றோம். ஜெனீவாவில் எமது வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் இலங்கையின் நிலைப்பாடு குறித்து தொடர்ந்தும் விளக்கமளித்து வருகிறார்.

இலங்கையில் நடைபெற்றதாகக் கூறப்படுகின்ற, நடைபெற்று வருவதாக கூறப்படுகின்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பாக சர்வதேச மட்டத்திலான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற அடிப்படையிலேயே அமெரிக்கா தீர்மானத்தை முன்வைத்துள்ளது. எனினும், இப்போது அந்தத் தீர்மானத்தில் பிரேரணையின் வடிவம் மாற்றப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் பிற்பகல்வரை ஜெனீவாவில் இருந்தேன் அதுவரை தீர்மானத்தில் நகல் வரைவு தினம் தினம் திருத்தப்பட்டுக் கொண்டே இருக்கிறது. இந்த தீர்மானம் தொடர்பாக தொடர்ந்தும் பேசுகிறார்கள், சில ஆபிரிக்க நாடுகள் சில திருத்தங்களை செய்ய வேண்டும் என்று கேட்கின்றன. அப்போதுதான் ஆதரவளிக்க முடியும் என்று தெரிவிக்கின்றன.

இதனால் தினம் தினம் மாற்றங்கள் செய்யப்பட்டுக்கொண்டே உள்ளன.எனினும், இலங்கையின் நிலைப்பாட்டை திருத்த வேண்டும் என்றோ, மாற்ற வேண்டும் என்றோ எவரும் கோரவில்லை எமது நிலைப்பாட்டில் மாற்றமில்லை. சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதற்கு எமது எதிர்ப்பை பலமாக தெரிவித்திருக்கிறோம்.

சர்வதேச விசாரணையொன்றை நடத்துமளவுக்கு இலங்கையில் மனித உரிமை மீறல்கள் நடைபெறவில்லை என்பதை வலியுறுத்தியிருக்கின்றோம். இந்த தீர்மானத்திற்கு வாக்களிக்கவுள்ள நாடுகளின் தூதுவர்களுக்கு, பிரதிநிதிகளுக்கு, வெளிவிவகார அமைச்சர்களுக்கு இலங்கை தமது நிலைப்பாட்டை விளக்கிக் கூறியுள்ளது. இது இலங்கையின் பொறுப்பாகும்’ என்றார்.

0 Responses to சர்வதேச விசாரணை நடத்துமளவுக்கு நாட்டில் மனித உரிமைகள் மீறப்படவில்லை: இலங்கை அரசாங்கம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com