Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

அமெரிக்க பிரேரணை மீதான வாக்கெடுப்பை இந்திய புறக்கணித்தமைக்கான எதிரொளியாக, இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து மீனவர்களை விடுதலை செய்யுமாறு ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளார்.

நல்லெண்ண அடிப்படையில் அவர்கள் அனவரும் விடுவிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. கடந்த இரண்டு வார காலப்பகுதியில் மாத்திரம் மற்றும் 100 தமிழக மீனவர்கள் வரையில் கைது செய்யபபட்டிருந்தனர்.

அவர்களுக்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கைகள் இடம்பெற்று வரும் நிலையில், நேற்று அமெரிக்காவின் பிரேரணை விடயத்தில் இந்திய இலங்கைக்கு ஆதரவாக செயற்பட்டதன் நிமித்தம், விசேட உத்தரவின் பேரில் அவர்களை விடுவிக்கப்படுகின்றனர்.

இந்திய பொதுத் தேர்தலை கருத்தில் கொண்டு, காங்கிரஸ் கட்சி இலங்கை அரசாங்கத்துடன் ஏற்கனவே பேசி வைத்து இவ்வாறு செயற்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

0 Responses to பிரேரணையை இந்தியா புறக்கணித்தமை அனைத்து மீனவர்களையும் விடுவிக்க மகிந்த உத்தரவு!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com