Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

உத்திரப்பிரதேசம் மீரட் தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர் நக்மா, கூட்ட நெரிசலால் தொண்டரின் கன்னத்தில் அறைந்தார்.

நடிகை என்பதால் மீரட் தொகுதியில் பிரச்சாரம் மேற்கொள்ள வரும் மீரட் தொகுதி வேட்பாளர் நக்மாவிற்கு கூட்டம் கட்டுக்கடங்காமல் குவிகிறது. இதனால் கூட்ட நெரிசலில் சிக்கி பெரும் அவஸ்தைக்கு உள்ளாகிறார் நக்மா. கடந்த இரு தினங்களுக்கு முன்னர் காங்கிரஸ் எம்எல்ஏ ஒருவர் நக்மாவின் கன்னத்தில் முத்தமிட்டதாக தகவல் வெளியாகியது. ஆனால், நக்மா அப்படி எதுவும் நடக்கவில்லை என்று கூறி இருந்தார்.

இந்நிலையில், மீரட் தொகுதிக்கு வாக்கு சேகரிக்க வந்த நக்மாவிடம் தொண்டர் ஒருவர் சில்மிஷம்  செய்ததாகவும், யார் என்று தெரியாத நக்மா எதிரில் இருந்தவரின் கன்னத்தில் கடுப்பாகி அறை விட்டதும் ஊடகங்களில்  பதிவாகியுள்ளது.இதுப் போன்ற சம்பவங்கள் நடப்பது சகஜம்தான் என்றாலும், இனி இதுப் போன்று நடந்தால் வாக்கு சேகரிக்க வர மாட்டேன் என்று நக்மா கூறியுள்ளதாகவும் தெரிகிறது. இதை அடுத்து கட்சித் தொண்டர்கள் நக்மவிற்குப் பாதுகாப்புக் கொடுக்க அறிவுறுத்தப் பட்டுள்ளார்கள் என்றும் தகவல் தெரிய வருகிறது.

0 Responses to கூட்டத்தில் தொண்டரின் கன்னத்தில் அறைந்த நக்மா

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com