Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் பிரேரணையில் சர்வதேச விசாரணை கோரிக்கையை உள்ளடக்குவது தொடர்பில் அடுத்தவாரம் பேச்சுவார்த்தை ஒன்று நடைபெறவுள்ளது.

பிரித்தானியாவின் வெளிவிவகார செயலாளர் வில்லியம் ஹேக் இதனைத் தெரிவித்துள்ளார்.  சிறிலங்காவுக்கு எதிரான சர்வதேச விசாரணை ஒன்றுக்கு  பிரித்தானியா தொடர்ந்தும் வலியுறுத்தும். இந்த நிலைப்பாட்டில் பிரித்தானியா உறுதியாக இருக்கிறது.

அத்துடன் இந்த பிரேரணையின் இறுதி வடிவம் குறித்த பேச்சுவார்தை ஒன்று எதிர்வரும் வாரம் நடைபெறும் என்றும் அவர் கூறியிருக்கிறார். 
இதன் போது இலங்கைக்கு எதிராக சர்வதேச விசாரணையை கோரும் யோசனையை பிரேரணையுடன் இணைப்பதா? இல்லையா? என்பது தொடர்பில் தீர்மானிக்கப்படும் என்றும் அவர் கூறி இருக்கிறார்.

சர்வதேச விசாரணையை கோரும் அமெரிக்காவின் பிரேரணைக்கு ஆதரவினை திரட்டும் முயற்சிகளை பிரித்தானியாவும் மேற்கொண்டு வருகிறது என்று தெரிவித்துள்ளார்.

0 Responses to பிரேரணைக்குள் சர்வதேச விசாரணையை இணைப்தா? இல்லையா? அடுத்த வாரம் பேர்ச்சுவார்த்தை – வில்லியம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com