Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

காணாமற்போனவர்களை கண்டுபிடித்து தருமாறு கோரியும், தமிழ் மக்களுக்கு மனித மாண்போடு கூறிய நீதியான தீர்வு வேண்டும் என்று வலியுறுத்தியும் மன்னார் பொது விளையாட்டரங்கில் இன்று வெள்ளிக்கிழமை கவனயீர்ப்பு உண்ணாவிரதப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

மன்னார் பிரஜைகள் குழு மற்றும் பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்படுகின்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், சுரேஷ் பிரேமச்சந்திரன் உள்ளிட்ட முக்கியஸ்தர்களும், மன்னார் கத்தோலிக்க மறை மாவட்ட ஆயர் இராஜப்பு ஜோசப், வடக்கு மாகாண சபையின் அமைச்சர்கள், உறுப்பினர்கள் மற்றும் பெருமளவு பொதுமக்களும் கலந்து கொண்டுள்ளனர்.

மனிதப் புதைகுழிகள் தொடர்பிலான சுயாதீன விசாரணையை உறுதிப்படுத்த வேண்டும், இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட எமது உறவுகள் எங்கே, மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை உறுதிப்படுத்தப்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் முன்வைத்துள்ளனர்.

கடந்த காலங்களில் தமிழ் மக்களுக்கு எதிராக இலங்கை அரசாங்கத்தினால் நிகழ்த்தப்பட்ட பாரிய வன்முறைகள் மற்றும் நெருக்கடிகள் தொடர்பில் சர்வதேசம் கவனத்தில் கொண்டு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் போராட்டக்காரர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

0 Responses to தமிழ் மக்களுக்கு நீதியான தீர்வு வேண்டும்; மன்னார் உண்ணாவிரதப் போராட்டத்தில் வலியுறுத்தல்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com