Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பறந்து கொண்டிருந்த விமானத்தில் ஹோலி கொண்டாட்டத்தில் ஈடுபட்டு நடனமாடியதால், பயணிகளின் பாதுகாப்பின் மீது அலட்சியம் காட்டியதாக ஸ்பைஸ் ஜெட் விமான பணிப்பெண்கள், மற்றும் விமான நிர்வாகம் மீது கடும் விமர்சனம் எழுந்துள்ளது.

இந்தியாவில் அண்மையில் ஹோலி பண்டிகை நாடங்கும் கொண்டாடப்பட்டது. இதன் ஒரு கட்டமாக கடந்த மார்ச் 17ம் திகதி ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் பயணித்த பயணிகளை மகிழ்விக்கும் பொருட்டு ஸ்பைஸ் ஜெட் விமானக் குழுவினர் நடுவானில் பறந்துகொண்டிருந்த விமானத்தில் ஏற்கனவே திட்டமிட்டு பயிற்சி பெற்றிருந்த நடனத்தை ஆடிப்பாடினர்.

இதனை ஆர்வமாக பயணித்த பயணிகள் பலரும், வீடியோ பதிவு மேற்கொண்டு யூடியூப், பேஸ்புக் போன்ற சமூகவலைத் தளங்களில் பதிவேற்றம் செய்தனர்.  எனினும் நடுவானில் விமானம் பறக்கும் போது ஹோலி நடனம் ஆடி விமானப் பாதுகாப்புச் சட்டத்தை மீறியதாக ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனத்திற்கு விமானத்துறை கட்டுப்பாட்டு நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

ஸ்பெஸ் ஜெட் நிறுவனத்தின்  8 விமானங்களில் நடத்தப்பட்ட இந்த ஹோலி பண்டிகை கொண்டாட்டத்தின் போது விமானி ஒருவர் விமானி அறையிலிருந்து வெளியே வந்து கொண்டாட்டங்களில் பங்கேற்றார். இது விமான நிறுவனங்களின் விதிமுறைகளுக்கு முரணானது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், விமானத்தில் பயணிக்கும் பயணிகளுக்கு பாதுகாப்பற்ற முறைகளை ஏற்படுத்தியதற்காக இரண்டு விமானிகள் தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்யபப்ட்டுள்ளனர்.

எனினும் ஸ்பைஸ் ஜெட் நிர்வாகம் குறித்த ஹோலி பண்டிகை நடனத்தில் ஈடுபட்ட விமானப் பணிப்பெண்கள், அதனை ஒழுங்கு செய்த நிர்வாகிகளுக்கு சார்பாகவே தனது கருத்தை நியாயப்படுத்தியுள்ளது. எங்களின் பயணிகளின் பாதுகாப்பிற்கு நாங்கள் உறுதி அளிக்கிறோம். விமானி அறையில் எப்போதும் ஒரு விமானி இருப்பதை நாங்கள் உறுதி செய்கிறோம். ஹோலி நடனம் மொத்தம் 2.5 நிமிடம் மட்டுமே நடைபெற்றது. ஐரோப்பாவில், மேற்குலக நாடுகளில் இவ்வாறு விமானத்தில் திடீரென கொண்டாட்டங்களில் ஈடுபட்டால் ஏற்றுக் கொள்கிறீர்கள். இந்தியா என்றதும் மாத்திரம் ஏன் நிராகரிக்கிறீர்கள். எப்படியாயினும் டிஜிசிஏவின் விசாரணைக்கு நாங்கள் ஒத்துழைப்பு கொடுப்போம் என ஸ்பைஸ் ஜெட் நிர்வாக அறிக்கையில் தெரிவித்துள்ளது.

0 Responses to பறந்து கொண்டிருந்த விமானத்தில் ஹோலி நடனமாடியதால் சர்ச்சையை ஏற்படுத்திய ஸ்பைஸ் ஜெட் பணிப் பெண்கள்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com