அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவின் துணைவியாரும், அமெரிக்காவின் முதல் பெண்மணியுமான மிச்சேல் ஒபாமா தனது இரு மகள்களுடன் சீனாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். அவரை சீன அதிபரின் துணைவியார் வரவேற்று கௌரவம் வழங்கியுள்ளார்.
அமெரிக்க - சீன உறவை மேலும் வலுப்படுத்தும் வகையில் இந்த சுற்றுப்பயணம் அமைந்துள்ள போதும், இது அரசியல் விடயங்களை குறிப்பாக, மனித உரிமை மீறல் சம்பவங்கள், சைபர் பாதுகாப்பு ஆகியவற்றை தவிர்த்து மேற்கொள்ளப்படும் தனிப்பட்ட சுற்றுப் பயணமே என அமெரிக்க வெள்ளை மாளிகை நிர்வாகம் அறிவித்துள்ளது.
கல்வியின் சக்தி மற்றும் முக்கியத்துவம் குறித்து தனது சீனச் சுற்றுப் பயணத்தில் கவனம் செலுத்தப் போவதாக மிச்சேல் ஒபாமா தெரிவித்துள்ளார். இதன் போது, சீனப் பெருஞ்சுவர், சீனாவின் மறக்கப்படிக்கப்பட்ட நகரம், டெராகொட்டா வாரியர்ஸ் மியூசியம், செங்க்டு பண்டா காட்சியகம் போன்றவற்றிற்கும் மிச்சேல் ஒபாமா சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார்.
அதோடு பல்கலைக் கழகம் ஒன்றில் மாணவர்கள் முன்னிலையில் சிறப்புரை ஒன்றையும் நிகழ்த்துகிறார். எதிர்வரும் ஏப்ரல் மாதம் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா ஆசியாவின் நான்கு நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார். எனினும் இதில் சீனா இடம்பெறவில்லை.

0 Responses to தனது இரு மகள்களுடன் சீனாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள மிச்சேல் ஒபாமா