Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

“எப்படியாவது எனது அம்மாவை மீட்டுத்தாங்கோ ”என்ற சாரப்பட அண்மையில் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டு, தற்போது மகாதேவா ஆச்சிரமத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள சிறுமி விபூஷிகா எழுதியதாக ஒரு கடிதம் முகப்புத்தகங்களில் உலா வருகின்றது.

தனது சகோதரர்களையும் இழந்து தற்போது தாயையும் பிரிந்து தவிக்கும் சிறுமி விபூஷிகாவின் அந்தக் கடிதம் வசிப்போரின் நெஞ்சை உருக்குகிறது.

எனினும் குறித்த கடிதம் விபூஷிகாவால்தான் எழுதப்பட்டதா என்பதை இன்னும் உறுதிப்படுத்த முடியவில்லை.

அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது-

நான் பா.விபூஷிகா. தாழ்மையுடன் வேண்டுகோள் விடுப்பது யாதெனில் எனது அம்மாவையும் விடுதலை செய்து தரும்படி கேட்டுக்கொள்கிறேன்.

என்னையும் எனது அம்மாவையும் கடந்த 13.03.2014 அன்று பிற்பகல் 4.00 மணியளவில் பொய்க்குற்றம் சுமத்தி அதிக இராணுவ மற்றும் பொலிஸ் பாதுகாப்புடன் எம்மைப் பாரிய குற்றச் செயல்களில் ஈடுபட்ட குற்றவாளிகளைப் போல எம்மை நடத்தி, எம்மைப் பயமுறுத்தி எனது அம்மாவைக் கால்களால் அடித்தும் தலைமயிரைப் பிடித்து இழுத்தும் கன்னங்களில் அறைந்தும் எம்மை பொய்யான தகவல்கள் எழுதப்பட்ட கடிதத்தில் என்னிடம் இருந்தும் எனது அம்மாவிடம் இருந்தும் கையொப்பம் பெறப்பட்டன.

ஆனால் நானோ எனது அம்மாவோ எந்தவிதமான குற்றச்செயல்களிலும் ஈடுபடவில்லை.

எனது அம்மா ஒரு அப்பாவி. எனது 3 ஆண் சகோதரகளும், ஏற்கனவே பிரிந்த நிலையில் தற்பொழுது எனது பூப்புனித நீராட்டு விழாக் காலப்பகுதியில் எனது அம்மாவையும் கைது செய்துள்ளபடியால், நான் எந்த உதவியுமின்றி எனது அம்மா இருந்தும் அனாதையாகவே இருக்கின்றேன்.

ஆகவே எந்த வழியிலாவது எனது அம்மாவின் மீது சுமத்தப்பட்டுள்ள பொய்க்குற்றச்சாட்டை மீளப்பெற்று, எனது அம்மாவை என்னுடன் மிக விரைவில் சேர்ந்து வாழ உதவுமாறு மிகவும் மன்றாட்டமாகக் கேட்டுக் கொள்கிறேன்.

இப்படிக்கு உண்மையுள்ள,
பா.விபூஷிகா

0 Responses to எனது அம்மாவை மீட்டுத்தாங்கோ!- விபூஷிகா உருக்கமான கடிதம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com