கடந்த 16 நாட்களுக்கு காணாமல் போன மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் MH370 இந்து சமுத்திரத்தில் வீழ்ந்து நொறுங்கியிருப்பதாக நேற்று மலேசியப் பிரதமர் உறுதிப்படுத்தியிருந்தார்.
எனினும் இதற்கான ஆதாரமாக தென்னிந்திய கடற்பகுதியில் தீப்பிடித்த நிலையில் எரிந்து கொண்டிருந்த உதிரிப்பாகங்களைக் கொண்ட கடற்பகுதிக்கு பகுதிக்கு மீட்புக் கப்பல்களை அனுப்பும் பணி, மோசமான காலநிலை காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
குறித்த மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் இந்து சமுத்திரத்தில் வீழ்ந்து நொறுங்கியதற்கான ஆதாரத்தை தெளிவாக உறுதிப்படுத்துமாறு சீன அரசு மலேசியாவுக்கு அழுத்தம் கொடுத்துள்ளது. விமானத்தில் பயணித்த பயணிகள் எவரும் உயிரோடு மீண்டிருக்க வாய்ப்பில்லை என அறிவிக்கப்பட்டதால் சீனாவில் உள்ள மலேசிய தூதரத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பயணிகளின் உறவினர்கள் பலரை காவல்துறையினர் கட்டுப்படுத்த முனைந்ததால் அங்கும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதேவேளை தென் இந்தியக் கடலில் விமானம் விபத்துக்கு உள்ளாகியிருப்பதால், அதுவரை விமானத்தைக் காப்பாற்றுவதற்கு மலேசிய ஏர்லைன்ஸ் விமானிகள் கடும் முயற்சி மேற்கொண்டிருக்கலாம் என சில ஊடகத் தகவல்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளன.
விமானத்தை அருகிலிருந்த விமான ஓடு தளம் ஒன்றில் அவசரமாக தரையிறக்குவதற்காக விமானத்தில் எரிபொருள் மீதமிருந்த வரை முயற்சித்திருக்கலாம் எனவும் குறிப்பாக அந்தமானில் தரையிறக்க முயற்சித்திருக்கலாம் எனவும் அத்தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதோடு விமானத்தின் ஏதோவொரு பாகத்தில் தீப்பிடித்துக் கொண்டதாலேயே, விமானத்தை 10,000 அடிக்கு குறைவான உயரத்தில் விமான ஓட்டுனர்கள் தொடர்ந்து பறக்கவிட்டிருக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது. எனினும் மலேசிய அரசு, குறித்த ஏர்லைன்ஸ் விமானிகளை தவறான கண்ணோட்டத்தில் காட்சிப்படுத்த முயற்சிப்பதாகவும் அதற்கு சான்றாகவே, அவர்களில் ஒருவர் எதிர்க்கட்சித் தலைவரின் ஆதரவாளர், அவரது வீட்டில் அவருக்கு என தனி விமானம் இருந்தது போன்ற தகவல்களை கூறிவருவதாகவும் விமர்சனம் எழுந்துள்ளது.
விமானம் பற்றிய மேலதிக செய்திகள்!

0 Responses to மலேசிய ஏர்லைன்ஸ் விமானிகள் உண்மையில் விமானத்தைக் காப்பாற்றவே முனைந்தனர்?