Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஆதரிக்காமல் புறக்கணித்ததன் இலங்கைக்கு ஆதரவாக காங்கிரஸ் அரசு செயல்படுவது நிரூபிக்கப்பட்டுள்ளதாக தமிழக பாஜக தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது,

ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தை ஆதரிக்காமல், வாக்கெடுப்பை இந்தியா புறக்கணித்தது மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது.

இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டுப் போரில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டனர். இந்த இனப்படுகொலையை விசாரிக்க வேண்டும் என உலக நாடுகள் குரல் கொடுத்து வரும் நிலையில் ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் இலங்கைக்கு ஆதரவான நிலையை காங்கிரஸ் அரசு எடுத்துள்ளது. இது தமிழர்களின் மத்தியி்ல் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழர்களுக்கு எதிரான மனநிலையில் மத்திய காங்கிரஸ் அரசு இருப்பதை தமிழர்கள் புரிந்து கொண்டுள்ளனர். தமிழர்களின் படுகொலைக்கு காரணமான இலங்கை அரசோடு கைகோர்த்து செயல்படும் காங்கிரஸ் செயல் கண்டிக்கத்தக்கது என பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

0 Responses to இலங்கை அரசோடு கைகோர்த்து செயல்படும் காங்கிரஸ் செயல் கண்டிக்கத்தக்கது: பொன். ராதாகிருஷ்ணன்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com