Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ராஜீவ் காந்தியின் கொலை வழக்கு குற்றவாளிகளுக்கு மீண்டும் மரண தண்டனையை வழங்கும் இந்திய மத்திய அரசாங்கத்தின் சூழ்ச்சிக்கு, இந்திய உயர் நீதிமன்றம் இன்று முற்றுப்புள்ளி வைத்தது.

சாந்தன், முருகன் மற்றும் பேரறிவாளன் ஆகிய மூன்று பேருக்கும் விதிக்கப்பட்டிருந்த மரணதண்டனை அண்மையில் ரத்து செய்யப்பட்டு, ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டிருந்தது.

இதற்கு இந்திய உயர்நீதிமன்றம் கடந்த ஜனவரி மாதம் 21ம் திகதி வழங்கிய தீர்ப்பு ஒன்றே அடிப்படையாக அமைந்தது.
இதன்படி, பயங்காரவாத சட்டத்தின் கீழோ அல்லது சாதாரண சட்டத்தின் கீழோ மரண தண்டனை விதிக்கப்படுகின்றவர்களின் கருணை மனுவை பரிசீலிக்க கால தாமதம் ஏற்படும் பட்சத்தில், அவர்களின் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க அதிகாரம் இருப்பதாக உயர்நீதிமன்றம் அறிவித்திருந்தது.

இந்த நிலையில் அந்த தீர்ப்பை ரத்து செய்வதன் ஊடாக, ராஜீவ் கொலை வழக்கு குற்றவாளிகளின் ஆயுள் தண்டனையை மீண்டும் மரணதண்டனையாக மாற்ற காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, சூழ்ச்சிகளை மேற்கொண்டிருந்தார்.
இதற்காக குறித்த தீர்ப்பினை மீளாய்வு செய்யுமாறு அவர் மனு ஒன்றையும் தாக்கல் செய்திருந்தார்.

இந்த நிலையில் இன்று அதனை விசாரணை செய்த இந்திய பிரதம நீதியரசர் பி.சாதாசிவம் தலையிலான உயர் நீதிமன்ற நீதியரசர்கள், குறித்த மனுவை நிராகரித்தனர்.

0 Responses to சோனியாவின் சூழ்ச்சிக்கு இந்திய உயர் நீதிமன்றம் முற்றுப்புள்ளி!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com