Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

விமானத்தில் பயணித்த அனைவரும் இறந்துவிட்டதாக எப்படி கூறுகிறீர்கள் என்று மலேசிய விமானத்தில் பயணம் செய்தவர்களின் உறவினர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

மாயமான மலேசிய விமானம் இந்திய பெருங்கடலில் விழுந்து மூழ்கிவிட்டது, அதில் பயணித்த அனைவரும் இறந்துவிட்டனர் என்று மலேசிய அரசு அறிவித்துள்ளது.

ஆனால் இதை நம்ப பயணிகளின் உறவினர்கள் சிலர் மறுக்கிறார்கள். செயற்கைக்கோள் படங்களில் மிதக்கும் பொருட்கள் தெரிந்தாலும் அவை மலேசிய விமானத்தின் பாகங்கள் தான் என்று இதுவரை உறுதி செய்யப்படவில்லை.

மேலும் விமானத்தின் கருப்புப் பெட்டியும் கிடைக்கவில்லை. அப்படி இருக்கையில் பயணிகள் அனைவரும் இறந்துவிட்டதாக கூறுவதை நம்ப தாங்கள் தயாராக இல்லை என்று பயணிகளின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

அந்த விமானத்தில் பயணித்த ஒருவரின் தந்தையான மலேசியாவைச் சேர்ந்த சுப்பிரமணியம் குருசாமி(60) கூறுகையில், என் மகன் இறந்துவிட்டான் என்று நான் நம்பும் வரை அவனுக்கு இறுதிச் சடங்குகள் செய்ய மாட்டேன். விமானத்தையும் கண்டுபிடிக்கவில்லை, கருப்புப் பெட்டியும் கிடைக்கவில்லை. அப்படி இருக்கையில் அனைத்து பயணிகளும் இறந்துவிட்டார்கள் என்று எப்படி கூற முடியும் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

0 Responses to அனைவரும் இறந்துவிட்டதாக எப்படி சொல்வீர்கள்? கதறும் பயணிகளின் உறவினர்கள்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com