நாட்டு மக்களின் விருப்பங்கள் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளதாக காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
புதுடில்லியில் இன்று புதன்கிழமை காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியிடும் நிகழ்வு நடைபெற்றது. அதில், கட்சியின் தலைவர் சோனியா காந்தி, துணைத்தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்டோர் கலந்துகொண்டு பேசினர்.
கல்வி, வேலைவாய்ப்பு, சிறுபான்மையினர் வளர்ச்சி, பொருளாதார வளர்ச்சி, முதலீடு இவைகளைக் கருத்தில் கொண்டு, தொலைநோக்குப் பார்வையுடன் இந்த தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், குறிப்பிடும்படியான தொழில் வளர்ச்சி கடந்த 10 ஆண்டுகளான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் உருவாகியுள்ளதாக குறிப்பிட்டார்.
அதுமட்டுமின்றி 14 கோடி ஏழை மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்ந்துள்ளது என்றும் மன்மோகன் சிங் கூறியுள்ளார். வேகமான பொருளாதார வளர்ச்சி ஒன்றே மத்திய அரசின் நோக்கமாக எப்போதும் இருந்துள்ளது. அப்படித்தான் இந்த தேர்தல் அறிக்கையும் தயாரிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
அனைத்து மக்களின் நலனையும் கருத்தில் கொண்டு தயாரிக்கப்பட்ட இந்த தேர்தல் அறிக்கையில் ஏழைகளின் நலத்திட்டங்கள், நாட்டு மக்களின் விருப்பங்கள் அடங்கியுள்ளன என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
0 Responses to நாட்டு மக்களின் விருப்பங்கள் தேர்தல் அறிக்கையில் உள்ளன:ராகுல் காந்தி