Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஜெனீவாவில் நடைபெறும் ஐ. நா மனித உரிமைச் சபையின் 25வது கூட்டத்தொடரில் தொடர்ந்து இரண்டு நாட்களாக வலி வடக்கு பிரதேச சபையின் துணைத் தவிசாளரும் வலி வடக்கு இடம்பெயர்ந்தோர் அமைப்பின் தலைவருமான சண்முகலிங்கன் சஜீவன் தாயகத்தில் நிலப்பறிப்புக்குள்ளாகிய மக்களின் நிலை குறித்து உரையாற்றியிருக்கிறார். நேற்று திங்கட்கிழமையும் இன்று செவ்வாய்க் கிழமையுமாக இரண்டு நாட்கள் அவர் தனது உரையினை ஆற்றியிருந்தார்.

முன்னதாக இனவாதம் குறித்த பொது விவாதத்தில் கலந்துகொண்ட சண்முகலிங்கன் சஜீவன் முக்கிய கருத்துக்களை சர்வதேசத்திற்கு முன்வைத்திருந்தார். தமிழர் வழிபாட்டுத்தலங்களை அழித்துவிட்டு தாயகத்தில் வழக்கில் இல்லாத ஒரு மதத்தின் சின்னங்களையும் வழிபாட்டிடங்களையும் அங்கு ஆக்கிரமிப்பு இராணுவத்தினூடாக நிறுவி வருவதாக குற்றஞ்சாட்டிய அவர் பின்னதாக அவ்விடங்களில் தமிழ் இன அழிப்பைக் குறிவைக்கும் குடியேற்றங்களை மேற்கொள்ளுதல் என்பது ஓர் இன அழிப்புக்கான சித்தாந்தம் ஒன்றின் அடிப்படையில் மேற்கொள்ளப்படுகிறது என்பதை சர்வதேச சமூகம் பகுப்பாய்வு செய்ய முன்வரவேண்டும் என்று வேண்டிக்கொண்டார்.

நேற்று திங்கட்கிழமையன்று அவர் பாலஸ்தீன விவகாரம் குறித்த விவாததில் அங்கு நடைபெறும் காசாவை ஒத்த ஒரு நிலைக்கே தமிழ் மக்களும் உள்ளாக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டு வலிகாமம் வடக்கு மக்களின் நிலைமையினை முன்வைத்திருந்தார். இதை எதிர்பார்த்திருக்காத சிறீலங்கா அரச தரப்பு அவர் உரையாற்றி முடியும் தறுவாயிலேயே தமது ஆட்சேபனையை வெளியிட்டனர்.

பத்தாயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் வலி வடக்கில் மீளக்குடியேற முடியாதவாறு அவர்களது காணிகள் 24 கிராம அலுவலர் பிரிவுகளில் இராணுவக் குடியேற்றத் திட்டமாக பறிக்கப்படுள்ளதை அவர் குறிப்பிட்டார். எந்தவித நிவாரணங்களும் இல்லாது இடம்பெயர்ந்த மக்கள் இன்னலுக்கு உள்ளாகியிருப்பதையும் அவர் அங்கு எடுத்துரைத்தார். கடைசி மூன்று மாதங்களில் அவர்களின் குடியிருப்புக்கள் பாடசாலைகள் மற்றும் மதத்தலங்களென அனைத்து கட்டிடங்களும் இலங்கை அரச படைகளினால் தரைமட்டமாக்க்கப்படிருப்பதையும் அவர் மனித உரிமைச் சபையின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளார்.

முன்னதாக சத்;தம் சந்தடியின்றி வடமாகாணசபையின் உறுப்பினரும் காணாமல் போனோருக்காக குரல் எழுப்பி வருபவருமான அனந்தி சசிதரன் நான்கு தடைவைகளாக ஐ. நா மனித உரிமைச்சபையின் 25வது கூட்டத்தொடரில் தொடர்ந்து உரையாற்றியிருந்தார்.அதிலும் தனித்தமிழில் அவர் ஆற்றிய உரை வரலாற்றினில் முக்கியத்துவம் பெற்றிருந்த நிலையினில் அவரை தொடர்ந்து சஜீவனும் கட்சிப்பின்னணி ஏதுமின்றி மூன்று தடைவைகளாக உரையாற்றியுள்ளமை இலங்கை அரசை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

0 Responses to வலி.வடக்கு நில ஆக்கிரமிப்பு விவகாரம் ஜ.நாவில்! அம்பலப்படுத்தினார் சஜீவன்!!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com