கைதாகி தடுத்து வைக்கப்பட்டுள்ள விபூசிகாவை ஏற்க யாரும் முன்வரவில்லை அதனாலேயே நீதிமன்ற உத்தரவின்படி அவர் சிறுவர் இல்லத்தில் சேர்க்கப்பட்டுள்ளதாக புதிய தகவலை வெளியிட்டுள்ளார் யாழ். மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்.
யாழ்ப்பாணம் பொலிஸ் தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கேள்வி ஒன்றிற்கு பதிலளிக்கையினிலேயே அவர் இத்தகவலை வெளியிட்டார்.அவர் மேலும் தெரிவிக்கையினில் தர்மபுரத்தை சேர்ந்த விஜயகுமாரி மற்றும் அவரது மகளான விபூசிகா ரி.ஐ.டியினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்ட பின்னர் தாயார் பூசாவுக்கும் மகள் சிறுவர் இல்லத்தில் அனுப்பப்பட்டும் உள்ளனர். கிளிநொச்சி விடயம் தொடர்பில் ஊடகங்களில் வெளிவந்த தகவல்களில் உண்மையில்லை.
ஒரே வீட்டிலேயே இருவரும் வசித்து வந்தனர். எனினும் அன்றைய சம்பவத்தை அடுத்து தாய் கைது செய்யப்பட்டதனால் தனிமையில் 13வயது சிறுமியை விட்டுச் செல்ல முடியாது . அதன்டிப்படையிலேயே சிறுமி விபூசிகாவையும் அழைத்துச் சென்று நீதிமன்ற உத்தரவின்படி சிறுவர் இல்லத்தில் ஒப்படைக்கப்பட்டார்.
எனினும் கைது நடந்த போது விபூசிகாவை பொறுப்பேற்குமாறு அயலில் உள்ள உறவினர்களிடம் கேட்கப்பட்டது. எனினும் அவர்கள் எவரும் முன்வரவில்லை இதனாலேயே அவரையும் சேர்த்து அழைத்துச் சென்றனர். இது கைது கிடையாது.
எனவே சிறுமியை பாதுகாப்போம் என்று கூறி அவர்களது உறவினர்கள் வந்தால் நீதிமன்ற உத்தரவின்படி அவர்களுடன் செல்ல அனுமதிக்கப்படுமென அவர் மேலும் தெரிவித்தார்.
0 Responses to விபூசிகாவை தடுத்து வைக்கவில்லையாம்! இலங்கை பொலிஸார் அறிவிப்பு!