இலங்கையில் நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்தும் நோக்கிலேயே அமெரிக்காவின் பிரேரணை ஜெனீவா மாநாட்டில் நிறைவேற்றப்பட்டதாக, அமெரிக்காவின் இலங்கைக்கான தூதுவர் மிச்செல் ஜெ.செசன் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இலங்கை நீண்டகாலமாக பல வன்முறைகளை சந்தித்துள்ளது.
யுத்த காலத்திலும், யுத்தத்தின் பின்னரும் பாதிக்கப்பட்ட மக்கள், சுய கௌரவத்துடன் வாழக்கூடிய சூழ்நிலை ஒன்று உருவாக்கப்பட வேண்டிய அவசியம் இருக்கிறது.
இந்த விடயங்களை மனதில் வைத்தே அமெரிக்காவின் பிரேரணை தயாரிக்கப்பட்டதே தவிர, இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக இல்லை என்று அவர் கூறியுள்ளார்.
அதேவேளை இலங்கை அரசாங்கத்தினால் உருவாக்கப்பட்ட கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளையும் முழுமையாக அமுலாக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
0 Responses to நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்தும் நோக்கமே அமெரிக்கத் தீர்மானம் - தூதுவர் மிச்செல்