கிளிநொச்சி தர்மபுரப் பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் சிங்களக் காவல்துறையைச் சேர்ந்த ஒருவர் காயமடைந்துள்ளார்.
இத்துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் நேற்று வியாழக்கிழமை மதியம் இடம்பெற்றுள்ளது. இதன்போது சிறீலங்கா பயங்கரவாதத் தடுப்புக் காவல்துறையைச் சேர்ந்த 50 அகவையுடைய ரண்டகுமா என்பவர் காயமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த துப்பாக்கிச் சூட்டை நடத்தியவர் காசியப்பன் அல்லது கோபி என்று அழைக்கப்படும் 31 அகவையுடைய கஜீபன் பொன்னையா செல்வநாயகம் என பயங்கரவாத் தடுப்புக் காவல்துறையினரால் இனம் காட்டப்பட்டுள்ளது. சந்தேசக நபரைக் காவல்துறையினர் வழிமறித்த போதே காவல்துறையினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
இத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தையடுத்து சிறீலங்காப் படையினர் பெருமளவில குவிக்கப்பட்டு தேடுதல் நடத்தப்பட்டதால் தர்மபுரம்இ கண்டவளைஇ முரசுமோட்டைஇ விசுவமடுப் பிரதேசங்கள் பெரும் பதற்றத்திற்கு உள்ளாகின.
குறித்த சந்தேக நபர் வட பகுதியில் சர்ச்சைக்குரிய சுவரொட்டிகளை ஒட்டிய சந்தேகத்தின் பேரில் காவல்துறையினரால் கடந்த சில தினங்களாக கைது செய்வதற்காகத் தீவிரமாகத் தேடப்பட்டு வந்தவராவர்.
கஜீபன் குறித்த தகவலை வழங்குமாறும் சில தினங்களுக்கு முன்னர் தென்னிலங்கை ஊடகங்களில் செய்தி வெளியாகி இருந்தது இங்கே குறிப்பிடத்தக்கது.

0 Responses to தர்மபுரத்தில் சிங்களக் காவல்துறையினன் மீது துப்பாக்கிச் சூடு! துப்பாக்கிதாரி தப்பியோட்டம்!