வேட்பாளரை பிடிக்கவில்லை அல்லது தேர்தலில் நிற்கும் வேட்பாளர் சரியான நபர் இல்லை அதனால் வாக்களிக்க விருப்பம் இல்லை என்று வீட்டில் இருந்து தங்கள் எதிர்ப்பை காட்ட நினைக்க வேண்டிய தில்லை. தங்களின் வாக்கை நோடோ என்ற பட்டனில் பதிவு செய்து எதிர்ப்பை காட்டலாம்.
இதனால் வேட்பாளர்களோ அல்லது அவர்களின் ஆதரவாளர்களோ பகையாவார்கள் என்று அச்சம் தேவையில்லை. ஏனெனில் நீங்கள் பதிவு செய்யும் வாக்கு வெளியே தெரியாது.
கடந்த பாராளுமன்ற தேர்தலின் போது புதுக்கோட்டை பாராளுமன்ற தொகுதி பறிபோனது. அதனால் அதனை மீட்க நினைத்த பொதுமக்கள் தங்கள் எதிர்ப்பை காட்ட 49 ஓ என்று பதிவு செய்து காட்டினார்கள். அதனால் மாவடடம் முழுவதும் சுமார் 14 ஆயிரம் வாக்குகள் எந்த வேட்பாளருக்கும் இல்லாமல் போனது.
அது போல இந்த முறையும் வாக்களிக்க சென்று விருப்பமில்லாமல் இருந்தால் நோடோவுக்கு வாக்களித்துவிட்டு வாங்க. என்று இளைஞர்கள் தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
இந்த இளைஞர்கள் புதுக்கோட்டைக்கு வந்து துண்டு பிரசுரங்களை கொடுத்து வீதி வீதியாக பிரச்சாரமும் செய்தனர்.




0 Responses to நோடோவுக்கு ஓட்டு போடுங்க: தமிழகம் முழுவதும் இளைஞர்கள் பிரச்சாரம்