அமெரிக்காவின் பசுபிக் பிராந்திய பாதுகாப்பு சபையும், இலங்கையின் பாதுகாப்பு அமைச்சும் இணைந்து நடத்தும் பாதுகாப்பு பயிற்சி பட்டறை நாளை ஆரம்பமாகிறது.
இதில் அமெரிக்காவைச் சேர்ந்த 20 அதிகாரிகள் கலந்துக் கொள்கின்றனர். நாளை முதல் தொடர்ந்து 9 நாட்களுக்கு இந்த பயிற்சி பட்டறை நடைபெறவுள்ளதாக இராணுவம் அறிவித்துள்ளது.
இதில் கனடா உள்ளிட்ட 15 நாடுகளின் பிரதிநிதிகளும் கலந்துக் கொள்ளவுள்ளனர். இலங்கைக்கு எதிராக யுத்தக் குற்ற விசாரணை நடத்தும் பிரேரணையை நிறைவேற்றி சில நாட்களுக்குள்ளேயே அமெரிக்க இலங்கையுடன் இணைந்து இந்த பயிற்சி பட்டறையை நடத்துகின்றமை குறிப்பிடத்தக்கது.




0 Responses to அமெரிக்கா மற்றும் இலங்கை இடையிலான பாதுகாப்புப் பயிற்சிப் பட்டறை நாளை ஆரம்பம்!