தனியார் நர்சிங் கல்லூரிகளில் பயின்ற மாணவர்களுக்கு அரசு மருத்துவமனைகளில் பணி வழங்கப் படும் என்கிற தமிழக அரசின் அரசாணை செல்லும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
அரசு மருத்துவமனையில் நர்சிங் படித்த மாணவர்களுக்கு மட்டுமின்றி, தனியார் நர்சிங் கல்லூரிகளில் படித்த மாணவர்களுக்கும் அரசு மருத்துவமனையில் பணியமர்த்தும் அரசாணையை 2012ம் ஆண்டு தமிழக அரசுப் பிறப்பித்து இருந்தது. இந்த அரசாணையை ரத்து செய்து, சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாக அப்போது இருந்த ராஜேஷ் குமார் அகர்வால் தலைமையிலான அமர்வு தீர்ப்பளித்து இருந்த நிலையில் இதுத் தொடர்பான மறுசீராய்வு மனுவை தமிழக அரசுத் தாக்கல் செய்து இருந்தது.
அந்த மனு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், தமிழக அரசின் அரசாணை செல்லும் என்று தீர்ப்பு வழங்கப் பட்டுள்ளது. கடந்த ஜனவரி மாதம் இந்த அரசாணைக்கு எதிராக அரசு மருத்துவமனையில் பயின்று வரும் செவிலியர்கள், மருத்துவமனையில் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தினர் என்பது குறிப்பிடத் தக்கது.

0 Responses to தனியார் நர்சிங் கல்லூரி மாணவர்களுக்கு அரசு மருத்துவமனையில் பணி அரசாணை செல்லும்:உயர் நீதிமன்றம்