யாழ்ப்பாணத்தினில் இடம்பெயர்ந்த மக்கள் தங்கியிருக்கும் முகாம்களினில் குழப்பங்களை ஏற்படுத்தி அங்கிருந்து அவர்களை வெளியேற்ற சதி மேற்கொள்ளப்படுவது அம்பலமாகியுள்ளது.
அவ்வகையினில் படையினரது ஏவல் குழுவாக செயற்படுவதாக நம்பப்படும் ஆவா குழுவினை அதற்கு பயன்படுத்துவதாக இடம்பெயர்ந்த மக்கள் தரப்பினில் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளது.
இதனிடையே சுன்னாகம் சபாபதிப்பிள்ளை நலன்புரி முகாமில் குழு மோதலில் ஈடுபட்ட ஆவாக் குழுவினர் என அடையாளங் காணப்பட்ட அறுவரை நேற்று செவ்வாய்க்கிழமை கைது செய்துள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். அத்துடன் அவர்களிடமிருந்து சிறிய ரக கூரிய ஆயுதங்கள் சிலவற்றையும் கைப்பற்றியதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
எனினும் மேற்படி நலன்புரி முகாம் பகுதியினில் தாக்குதல் நடத்திய ஆவா கும்பலை முகாம் மக்களே பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.எனினும் தொடர்புபட்ட 6 பேரை தாமே கைது செய்ததாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

0 Responses to மீண்டும் ஆவா குழுவாம்! வலி.வடக்கு முகாம்களில் குழப்பங்களை ஏற்படுத்த சதி!!