ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்பட்ட தீர்மானத்தின் மீதான வாக்களிப்பை இந்தியா புறக்கணித்தமை ஏமாற்றமளிப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
ஏற்கனவே இரண்டு தடவைகளும் இலங்கைக்கு எதிரான தீர்மானத்துக்கு ஆதரவாக இந்தியா வாக்களித்திருந்தது. அவ்வாறானதொரு நிலையில், இம்முறை வாக்களிப்பை தவிர்த்தமை ஏமாற்றத்தை அளித்ததாக அமெரிக்க இராஜங்கத் திணைக்களத்தின் பிரதிப் பேச்சாளரான மேரி ஹார்ப் தெரிவித்துள்ளார்.
அத்தோடு, இலங்கைக்கு எதிரான தீர்மானத்தின் வாக்கெடுப்புக்கு முந்திய விவாதத்தில் இந்தியாவின் பிரதிநிதி வெளியிட்ட கருத்துக்களும், நடந்து கொண்ட விதமும் கூட திருப்தியளிக்கவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

0 Responses to இலங்கைக்கு எதிரான ஐ.நா. தீர்மானத்தின் மீதான வாக்களிப்பை இந்தியா புறக்கணித்தது ஏமாற்றமே: அமெரிக்கா