'சிறிலங்கா தொடர்பாக நிறைவேற்ற இருக்கும் தீர்மானமானது தீர்வின் ஒர் அங்கமா அல்லது பிரச்சினையின் ஓர் அங்கமா' என்பது குறித்து ஆராய்வதற்காக கடந்த வெள்ளிக்கிழமை மார்ச்சு 21, 2014, ஜெனீவா ஊடக கழகத்தில் அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவையின் நெறியாள்கையில் ஓர் ஊடக மாநாடு நடைபெற்றது.
தாயகத்திலிருந்து வருகை தந்திருந்த மக்களால் தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதிகள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் புலம்பெயர் நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் ஆகியோர் தற்போது சிறிலங்கா குறித்து ஐ.நா. மனித உரிமைகள் பேரவையால் நிறைவேற்றப்பட இருக்கும் தீர்மானத்தில் உள்ள குறைபாடுகள் குறித்து இந்த மாநாட்டில் ஆராய்ந்தார்கள். அத்துடன், தாயகத்தில் தொடர்ந்து நடந்தேறிக்கொண்டிருக்கும் தமிழ் இனப்படுகொலையை சர்வதேசரீதியாக பரப்புவதற்கு என்ன செய்யப்படலாம் என்பது குறித்த ஒரு பகுப்பாய்வையும் வழங்கியிருந்தார்கள்.
சிறிலங்கா ஒற்றை ஆட்சிக்குள் ஈழத் தமிழ் இனப்படுகொலை குறித்த உண்மையான பிரச்சினை அந்த தீர்மானத்தில் - அதன் தற்போதைய வடிவில் உள்ள - கூறப்படவில்லை என்பதை மாநாட்டின் பிரதிநிதிகள் குழு ஏற்றுக்கொண்டது. வேண்டுமென்றே அந்த தீர்மானத்தில் 'தமிழ்' என்ற சொல்லே இல்லாமல் செய்து (ஈழத்தமிழரின் நீண்டகால இனவழிப்புக்கு எதிரான அரசியல் பிரச்சினையை) ஒரு மதச் சிறுபான்மையினரின் பிரச்சினை எனப் பலவீனப்படுத்தி, தமிழரின் தேசிய உரிமைகளை அந்த தீர்மானம் பறிக்கின்றது என மாநாட்டுக் குழுவினர் வாதிட்டார்கள்.
இலங்கைப் பிரச்சனையானது முஸ்லிம், இந்து, கிறீஸ்தவ மதச்சிறுபானமையினர்கு எதிராக நடைபெறும் மனித உரிமை மீறல் என்பதாகச் சித்தரிக்கப்பட்டிருப்பது தொடர்பிலும் தமது எதிர்ப்பினையும் அதிருப்தியினையும் வெளியிட்டு இருந்தார்கள்
'ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்படவுள்ள தற்போதைய தீர்மானம் ஈழத் தமிழர்கள் முகங்கொடுத்துவரும் மையப் பிரச்சினையை புறக்கணிக்கிறது,' என அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவையின் இணைத் தலைவரான பேராசிரியர் சிறி இரஞ்சன் அவர்கள் தெரிவித்தார். 'அந்த தீர்மானம் எமக்கு ஆழமான ஏமாற்றத்தை தருகிறது. தொடர்ச்சியான அதன் மூன்றாவது ஆண்டாக நிறைவேற்ற இருக்கும் தீர்மானமானது படை ஆக்கிரமிப்பு, நில அபகரிப்பு, சிங்கள மயப்படுத்தல், பாலியல் வல்லுறவு மற்றும் அடிப்படைச் சிவில் சுதந்திரம் மறுக்கப்படுதல் ஊடாக வெளிப்படையாக தொடர்ந்து அரங்கேறிக்கொண்டிருக்கும் இனப்படுகொலையை தடுத்து நிறுத்துவதற்கேற்ற ஆற்றல் கொண்டிருக்க வேண்டியது மிகவும் முக்கியமானது,' எனக் குறிப்பிட்டார்.
ஜெனீவாவில் நிகழ்ந்த ஊடக மாநாட்டு குழுவில் பின்வரும் பிரதிநிதிகள் உரையாற்றியிருந்தனர் : கஜேந்திரகுமார் பொன்னம்பலம் (தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி), பேராசிரியர் சிறி இரஞ்சன் (அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவையின் இணைத் தலைவர்), குமாரவடிவேல் குருபரன் (தமிழ் சிவில் சமூக மக்களவை), சிவாஜிலிங்கம் மகாலிங்கம் கனகலிங்கம் (தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு), இலக்சி அலெக்சு இலம்பேர்ட் (அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை), கலாநிதி. அன்றூ ஹிக்கின்பொற்றம் (சிறீலங்கா மீதான மக்கள் தீர்ப்பாயத்தின் வழக்கறிஞர், இலண்டன் கிங்ஸ்ரன் பல்கலைக்கழகத்தில் சர்வதேச அரசியல் மற்றும் மனித உரிமைகள் விடயத்தில் தலைமை விரிவுரையாளர்), பாசண அபெயவர்த்தென (சிறிலங்காவில் சனநாயகத்துக்கான ஊடகவியலாளர்கள்) மற்றும் கிருஸ்ணா சரவணமுத்து (அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை) ஆகியோர்கள் ஆவர்.
இதில் கலந்து கொண்டிருந்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கருத்து வெளியிடுகையில் குறித்த தீர்மான வரைபை உற்று நோக்குகின்ற போது இலங்கைத் தீவில் வெறுமனே ஓர் ஆட்சி மாற்றத்தினை மட்டும் கொண்டுவருவதற்காக உருவாக்கப்பட்டது போல் இருக்கின்றது என்றும் இதில் தமிழ் மக்களிற்கு எந்தவொரு சாதகமான அம்சங்களும் இல்லை என்றும் தெரிவித்தார்.
அவர் மேலும் கருத்து வெளியிடுகையில் தான் மகிந்த இராஜபக்ச அரசை கடுமையாக விமர்சிக்கும் ஒருவர் என்றும் இந்த அரசு மாற்றப்பட வேண்டும் என்பதில் தனக்கு மாற்றுக் கருத்து கிடையாதென்றும் ஆனால் அது மட்டுமல்ல தமிழ் மக்களின் பிரச்சனையென்றும் இலங்கையை மாறி மாறி கடந்த 65 ஆண்டுகள் ஆட்சி செய்த ஆட்சியாளர்கள் அனைவரும் தமிழ் மக்களிற்கு அநீதி இழைத்தவர்கள் தான் என்றும் கருத்து வெளியிட்டார்.
மேலும் தற்போதைய எதிர்கட்சித்தலைவரும் முன்னாள் பிரதமரும் சமாதான உடன்படிக்கையை ஏற்படுத்தியவருமான ரணில் விக்கிரமசிங்க தான் ஆட்சிக்கு வந்தாலும் போர்க்குற்ற விசாரணைக்கு தனது படையினரை உட்படுத்த மாட்டேன் என்றும் இனப்பிரச்சினைக்கு 13ம் திருத்தச் சட்டத்தின் அடிப்படையில் மாகாணசபை முறைமைக்கு மேலே செல்லத் தான் தயாரில்லை என்றும் கருத்து வெளியிட்டிருந்தமையையும் சுட்டிக்காட்டிய அவர் சமாதான காலத்தில் ரணில் வாங்கிக் குவித்திருந்த ஆயுதங்களைப் பயன்படுத்தியே மகிந்த அரசு போரினைத் தொடங்கி பாரிய இன அழிப்பினை நடாத்தியதையும் நினைவுபடுத்தினார்.
ஆகவே ஆட்சிமாற்றத்தினையும் தாண்டி தமிழ் மக்களிற்கு பாதுகாப்பையும் அரசியல் தீர்வையும் வழங்கக்கூடிய வகையில் தீர்மான வரைபு மாற்றப்படவேண்டும் என்றும் நடந்த நடந்து கொண்டிருக்கின்ற இனவழிப்பிற்கு சர்வதேச பக்கச்சார்பற்ற விசாரணையும் நடந்து கொண்டிருக்கும் கட்டமைப்பு சார் இனவழிப்பை நிறுத்த இராணுவம் அகற்றப்பட்ட இடைக்கால நிர்வாகம் ஏற்படுத்தப்படவேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
தொடர்ந்து குமாரவடிவேல் குருபரன் அவர்கள் உரையாற்றுகையில் தாயக அரசியல் அமைப்புகள் மற்றும் புலம்பெயர் அமைப்புகள் " ஜெனீவாவுக்கு காத்திருப்போம் , ஜெனீவா தமிழ் மக்களுக்கு அதிசயம் கொண்டுவரும்" என்று காத்திருக்காமல் தமது தமிழ்த் தேசிய நலன் கருதிய போராட்டத்தை பல்பரிணாம தெரிவுக்கு உட்பட்டு விரிவுபடுத்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார் .
'தமிழ் மக்களுக்கு எதிராக சிறிலங்காவால் இழைக்கப்பட்ட போர்க்குற்றங்கள், மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்கள் மற்றும் இனப்படுகொலையை விசாரிப்பதற்காக ஒரு சர்வதேச, சுதந்திர, நம்பகரமான விசாரணையை கோர சந்தேகத்துக்கிடமின்றி மீண்டும் ஒருமுறை இந்த தீர்மானம் தவறுவதன் காரணமாக நாங்கள் முழுமையாக ஏமாற்றப் படுகிறோம்,' என்றார் அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவைப் பேச்சாளரான கிருஸ்ணா சரவணமுத்து அவர்கள். 'கடந்து சென்றுகொண்டிருக்கும் ஒவ்வொரு ஆண்டும் (சிங்கள) குடியேற்றங்கள், (படை) ஆக்கிரமிப்பு என்பன ஊடாக தமிழர் தாயகத்துக்கு ஆப்புவைத்துக்கொண்டு, சிறிலங்கா அரசுக்கு ஆதாரங்களை மறைப்பதற்கு அதிக கால அவகாசம் வழங்கப்படுகிறது,' என அவர் மேலும் வாதிட்டார்.
கலந்து கொண்ட பேச்சாளர்கள், அனைவரும் குறித்த தீர்மானமானத்தில் நடைபெற்ற நடைபெற்றுக் கொண்டிடுக்கின்ற இன அழிப்பிற்கு எதிராக சர்வதேச பக்கச்சார்பற்ற விசாரணை, நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற கட்டமைப்புசார் இன அழிப்பை தடுத்து நிறுத்த ஓர் இடைக்கால நிர்வாகம், தீர்வு தொடர்பில் தமிழ் மக்களின் கருத்தறியும் வாக்கெடுப்பு என்பன உள்ளடக்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.
எதிர்வரும் வாரம், இந்த கூட்டத்தொடரில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவை அந்த தீர்மானத்தை ஆதரித்து வாக்களிக்கவுள்ள நிலையில், தமிழ் இனப்படுகொலையை தெளிவாகப் பிரதிபலிக்கக்கூடிய ஒரு தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டுமென ஈழத் தமிழர்களும் அவர்களது ஆதரவாளர்களும் இந்தத் தருணங்களின் போது தொடர்ச்சியாக வலியுறித்திக்கொண்டே இருப்பார்கள்.

0 Responses to "ஜெனீவா அதிசயம் கொண்டுவருமென்று காத்திருக்காமல் நாம் போராடவேண்டும்: குருபரன்