Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பிரித்தானியாவில் உள்ள நியூபோர்ட் மாநிலத்தில் டிசம்பர் மாதம் மர்மமான முறையில் காணம்ல்போன "நிடா" என்னும் ஆசியப் பெண்ணின் சடலத்தை பொலிசார் இன்று கண்டுபிடித்துள்ளார்கள். நிடா என்னும் 19 வயதுப் பெண், கடந்த டிசம்பர் மாதம் 28ம் திகதி இரவு 8 மணிக்கு தனது வீட்டில் உள்ள கழிவு பையை வெளியே எறியச் சென்றார். ஆனால் அவர் அதன் பின்னர் வீடு திரும்பவே இல்லை. வீட்டில் உள்ள சமையல் அறையில் உள்ள கழிவு பையை வீட்டிற்கு வெளியே உள்ள பின்னில் போடச் சென்றவர், நீண்ட நேரமாகத் திரும்பவில்லை என்று அவரது சகோதரி மற்றும் பெற்றோர்கள் தேடியுள்ளார்கள். இருப்பினும் வெளியே சென்ற அவர் வீடு திரும்பவில்லை. அன்றைய தினம் நிடாவின் பெற்றோர் பொலிசாருக்கு தகவல் வழங்கியுள்ளார்கள்.

பொலிசார் அவரது வீட்டைச் சுற்றி தேடுதலை நடத்தினர்கள். அன்று முதன் இன்றுவரை நிடாவின் பெற்றோர் அவர் சொல்லாமல் கொள்ளாமல் எங்கோ சென்றுவிட்டார் என்று நினைத்தார்கள். ஆனால் இன்றைய தினம் நிடாவின் வீட்டில் இருந்து சுமார் 6.5 மைல் தொலைவில் அவரது சடலம் காணப்படுவதாக பொலிசார் தெரிவித்துள்ளார்கள். கடந்த 3 மாதங்களாக வரது சடலம் அங்கே இருந்ததா? இல்லை தற்போது தான் அவர் இறந்துள்ளாரா என்ற விடையம் தெரியவில்லை. குறித்த இடத்தைச் சுற்றி பொலிசார் பாதுகாப்பு போட்டு தடையவியல் நிபுணர்களை அழைத்து, அவ்விடத்தை சோதித்து வருகிறார்கள். நிடா சடலமாக மீட்க்கப்பட்டது, அவ்வூர் மக்களை பெரும் அதிர்சியில் ஆழ்த்தியுள்ளது.

உயர்தர படிப்பை முடித்துவிட்டு, பல்கலைக்கழக அனுமதிக்காக நிடா காத்திருந்துள்ளார். இருப்பினும் அவருக்கு பல்கலைக்க்கழகம் கிடைக்கவில்லை. இதனால் அவர் மன நிலை பாதிக்கப்பட்டு இருந்ததாக தற்போது பெற்றோர் கூறியுள்ளார்கள். இருப்பினும் என்ன நடந்தது என்பது பெரும் சந்தேகமாக உள்ளதாக நியூ போர்ட் பொலிசார் கூறியுள்ளார்கள்.

இலங்கை தீர்மானம் பற்றிய சூடான ஒரு விவாதம்!! (காணொளி இணைப்பு)

0 Responses to லண்டனில் காணமல்போன "நிடா" சடலமாக மீட்ப்பு!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com