Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கார்த்திக் நாடாளும் மக்கள் கட்சியின் நிறுவனராக  உள்ளார். இக்கட்சி நடைபெறும் மக்களவை தேர்தலில் காங்கிரசுடன் கூட்டணி சேர்ந்துள்ளது.

மதுரை தொகுதிக்கு காங்கிரஸ் ஏற்கனவே, வேட்பாளரை அறிவித்துவிட்டது. இந்நிலையில் கார்த்திக், கூட்டணி சேர்ந்துவிட்டதால், அவருக்கு மதுரை தொகுதியில் போட்டியிட காங்கிரஸ் சம்மதித்துள்ளது.

மதுரையில் மு.க.அழகிரியின் ஆதரவை பெற்று வெற்றிக்கனி பறித்துவிடலாம் என்று கார்த்திக்கும், காங்கிரஸ் தலைவர்களூம் முடிவு செய்துள்ளனர்.  இதற்காக அழகிரியை சந்தித்து ஆதரவை கேட்க உள்ளனர். அழகிரியின் ஆதரவு தனக்கு நிச்சயம் கிடைத்துவிடும் என்று காங்கிரஸிடம் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார் கார்த்திக்.

இலங்கை தீர்மானம் பற்றிய சூடான ஒரு விவாதம்!! (காணொளி இணைப்பு)

இன்று 29.3.2014ல் காலையில் நடிகர் கார்த்திக், வீட்டிற்கு செல்கிறார் தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன். காங்கிரஸ் மேலிடம் நாடாளும் மக்கள் கட்சியை கூட்டணியாக அறிவித்த அதிகாரப் பூர்வமான கடிதத்தை கார்த்திக்கிடம் தருகிறார். பின்னர் வெற்றி வியூகம் - பிரச்சாரம் குறித்து ஆலோசனை செய்யவிருக்கிறார்கள்.

nakkheeran


0 Responses to நடிகர் கார்த்திக் காங்கிரசுடன் கூட்டணி: அழகிரி ஆதரவுடன் மதுரையில் போட்டி!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com