Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இன்றைய ராசி பலன் 30-04-2014 | Raasi Palan 30-04-2014

பதிந்தவர்: தம்பியன் 30 April 2014

மேஷம்
நீண்ட நாளைய ஆசையன்று நிறைவேறும் நாள். மனதில் புதிய எண்ணங்கள் தோன்றிக்கொண்டே இருக்கும். திருமணப் பேச்சுக்கள் முடிவாவதற்கான அறிகுறிகள் தோன்றும். வருமானம் திருப்தி தரும்.

ரிஷபம்
வரவைக் காட்டிலும் செலவு கூடும் நாள். வருங்கால நலன் கருதி புதிய முடிவெடுப்பீர்கள். இடம் பூமி சேர்க்கை உண்டு. முன்னேற்றம் கூட முருகப்பெருமானை வழிபட்டு வருவது நல்லது.

மிதுனம்
நிதி நிலை உயரும் நாள். நிகழ்காலத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வதில் ஆர்வம் கூடும். வெளியூர் பயணங்களை மேற்கொண்டு மகிழ்வீர்கள். சகோதர வழியில் சந்தோஷம் ஏற்படும்.

கடகம்
தொழில் வளம் மேலோங்கும் நாள். வீடு கட்டும் பணியில் தீவிரம் காட்டுவீர்கள். ஆடம்பரப் பொருட்களை வாங்குவதில் அதிக ஆர்வம் ஏற்படும். கவலைகள் தீரக் கந்தனை வழிபட்டு வருவது நல்லது.

சிம்மம்
மகிழ்ச்சி கூடும் நாள். மறதியால் விட்டுப்போன பணியன்றை இன்று செய்து முடிப்பீர்கள். தேக ஆரோக்கியத்தில் தெளிவு பிறக்கும். நேசம் மிக்க நண்பர்கள் நெஞ்சம் மகிழும் விதம் உதவி செய்வர்.

கன்னி
அன்றாடப் பணிகளில் சிறு தடை தாமதங்கள் ஏற்பட்டு அகலும். ஆரோக்கியப் பாதிப்புகளைத் தவிர்க்க ஆகாரத்தில் கட்டுப்பாடு தேவை. பிரியமான சிலரிடம் யோசித்துப் பேசும் சூழ்நிலை ஏற்படலாம்.

துலாம்
காரிய வெற்றி காண கந்தனை வழிபட வேண்டிய நாள். குடும்பத்தினர்களின் நலனில் அதிக அக்கறை காட்டுவீர்கள். எப்படி நடக்குமோ என்று நினைத்த காரியம் நல்லபடியாக நடைபெற வழிகிடைக்கும்.

விருச்சகம்
ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படுத்தும் நாள். நண்பர்கள் ஆதரவுக் கரம் நீட்டமுன்வருவர். தொழில் போட்டிகளைச் சமாளிப்பீர்கள். தொலைபேசி வழித்தகவல் தொழிலுக்கு உறுதுணையாக அமையும்.

தனுசு
பிள்ளைகளால் பெருமைகள் ஏற்படும் நாள். வீட்டைச் சீரமைப்பதில் அதிக அக்கறை காட்டுவீர்கள். இடம், பூமியால் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். வெளிவட்டாரப் பழக்க வழக்கம் விரிவடையும்.

மகரம்
நன்மைகள் நடைபெறும் நாள். தாயின் உடல் நலத்தில் அக்கறை காட்டுவீர்¢கள். மங்கல நிகழ்ச்சிகள் மனையில் நடைபெறுவதற்கான வாய்ப்பு உண்டு. மாலை நேரம் மகிழ்ச்சிப் பயணம் உண்டு.

கும்பம்
உடன் பிறப்புகள் உதவிக்கரம் நீட்டும் நாள். புதிய அனுபவங்கள் கிடைத்து மகிழ்வீர்கள். ஆடம்பரப் பொருட்களை வாங்கி மகிழும் வாய்ப்பு கிட்டும். தொழில் ரீதியாக பயணம் ஒன்றை மேற்கொள்வீர்கள்.

மீனம்
தொட்ட காரியம் வெற்றி பெறும் நாள். தொகை கேட்ட இடத்தில் இருந்து வந்து சேரும். வீட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலை உருவாகும்.

0 Responses to இன்றைய ராசி பலன் 30-04-2014 | Raasi Palan 30-04-2014

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com