கூட்டமைப்பு தலைமையினை தாண்டி ஜெனீவா சென்று சாதித்த தரப்புக்கள் மீது இன்று சம்பந்தன் காட்டமான விமர்சனங்களை முன்வைத்துள்ளதாக தெரியவருகின்றது. இன்று திருமலையினில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் கூட்டத்திலேயே சம்பந்தன் கட்சி தலைமையின் உத்தரவை தாண்டி சென்றவர்கள் பற்றியே விமர்சனங்களை முன் வைத்துள்ளார்.
இதனிடையே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து தமிழர் விடுதலைக் கூட்டணியை வெளியேற்றுவது தொடர்பில் நேற்றைய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் ஆராயப்பட்டுள்ளது. அத்துடன் நேற்றைய கூட்டத்திற்கு தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகளை உள்ளடக்கிய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் திருகோணமலையில் நேற்று இடம்பெற்றது. இந்தக் கூட்டத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணியைச் சேர்ந்த எவரும் கலந்து கொள்ளவில்லை.
இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ. சுமந்திரன் மற்றும் சி.சிறீதரன் ஆகியோர், தமிழர் விடுதலைக் கூட்டணி கலந்துகொள்ளாமை தொடர்பில் கேள்வியெழுப்பினர். இதன்போதே தமிழர் விடுதலைக் கூட்டணிக்கான அழைப்பு விடுக்கப்படவில்லை என்பது தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ. ஆனந்தசங்கரியினால், தமிழ்த் தேசியக் கூட்டமைபின் பெயரை, இலங்கை தமிழரசுக் கட்சி பயன்படுத்துவதற்கு உரித்தில்லை என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பயன்படுத்தக் கூடிய உரிமை தமிழர் விடுதலைக் கூட்டணிக்கும் ஏனைய அங்கத்துவக் கட்சிகளுக்குமே உண்டு என்றும் தேர்தல்கள் ஆணையாளருக்கு கடிதம் எழுதிய விடயமும் இதன் போது ஆராயப்பட்டது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து கொண்டே கட்சியைப் பலவீனப்படுத்தும் செயற்பாட்டுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் தமிழர் விடுதலைக் கூட்டணி தொடர வேண்டுமா என்பது தொடர்பில் அங்கத்துவக் கட்சிகள் நான்கும் தனித் தனியே கலந்துரையாடி அது தொடர்பிலான முடிவை தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரியிடம் தெரிவிப்பதென்றும் நேற்றைய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

0 Responses to ஜெனீவா சென்றவர்கள் மீது சம்பந்தன் சீற்றம்!